ராட்சசி
ராட்சசி
1 min
387
உன்னில் மயங்கி ....
உனக்கு விலை கொடுத்து ...
உள்ளே அனுப்பி...
உள்ளுணர்வை கிளப்பி ...
ஆடும் ஆட்டத்தில் ...
ஆடை நழுவி...
அம்மணமாய் கிடந்தாலும் ...
முச்சந்தியில் விழுந்தாலும்...
மூர்ச்சையாகி போனாலும்..
அடிபட்டு ...
அவயங்கள் உடைந்தாலும்
கூச்சலிட்டு...
குடும்பங்கள் பிரிந்தாலும். ..
குடும்பத்தையே இழந்தாலும் .. ஆஸ்திகளை இழந்து....
ஆவியையே விட்டாலும்...!!
அழகியே!!! அழகான ராட்சசியே!!!
உன்னை மறக்க
மனம் நாணிடுதே!
உன் நினைவிலேயே
மடிய தோணிடுதே!!
