STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

பயணம் தடமாறி

பயணம் தடமாறி

1 min
406

வேலியே பயிரை மேய்ந்தாற்போல்

தன் பெண்ணை பாதுகாக்க வேண்டிய தகப்பனே...?

காமதேவனே, 

பெண் என்ன போகப்பொருளா?

போதைப் பொருளா?

நீர் ஏன் இன்னும் காம் ஆக இருக்கிறீர்?

குமரிகள் குழந்தைகள் ஏன் கிழவிகள் கூட பாவம்!

 காமம் மேலோங்கினால்

மூளை மழுங்கிடுமோ 

கண்பார்வை குன்றிடுமா? 

தாய் பிள்ளை மறந்திடுமா?

மனைவி மக்கள் மறைத்திடுமா?

 காமம் 

கிழவனையும் விட்டு வைக்கவில்லை!

உடல் தளர்ந்து

உள்ளம் தளர்ந்து 

நாடி தளர்ந்து 

நடை தளர்ந்து 

தாடைகள் ஒட்டி

தடிகள் ஊன்றி நடந்தாலும்

ஏன் இந்த அவலம்

அறியா பாலகருக்கு

பால் உணவை ஊட்டும் வயதில் 

பாலுணர்வை ஊட்டுவது ஏனோ?  

  நீ பகுத்தறிவை தர மறந்தது ஏனோ? 

பற்றாக்குறைக்கு...

நாலு சுவற்றுக்குள் நடப்பதை 

நாடறிய போட்டுக் காட்டி

முப்பதில் முழுமை பெற வேண்டியதை

பதின்ம வயதிலே பார்த்து ?

படிப்பைத் தொலைத்து

பாதை மாறி...

பயணம் தடுமாறி...

 காலக் கோளாறா?

அறிவியல் வளர்ச்சியா?

சமுதாயத்தின் வீழ்ச்சியா?

பிஞ்சிலே நஞ்சைக் கொட்டி 

காய்களை கனியாக்கும்...

கதையாய் 

ஊடகங்கள் செய்யும் சதி?

சமுதாயத்தில் குழந்தைகளுக்கில்லை நீதி!

யாரைக் குறை சொல்வது?

சமுதாயக் கறைகளை யார் களைவது?

கொரோனோ ஆயிரம்

நல்ல பாடங்களை 

கற்றுத் தந்தாலும் 

ஆன்லைன் வகுப்பினால்

செல்ஃபோன் அழகி 

எல்லோர் கரங்களிலும் தவழ்ந்து

மடியிலேயே மஞ்சம் கண்டு 

அவளையே தஞ்சம் கொண்டு 

வயதை மிஞ்சும் செயல்!

தாயாய் தமக்கையாய்

மகளாய்

 மனதிலே கண்ணியம் காத்த

காலம் காணாமல் போனது பார்வையில் ஒரு காமம்

பிஞ்சுகள் பாவம் 

தவிர்த்திடுவோம் பாபம்!

எச்சரிக்கை கொடுத்திடுவோம் 

 


 



Rate this content
Log in