STORYMIRROR

Chidambranathan N

Children Stories Classics Children

4  

Chidambranathan N

Children Stories Classics Children

பட்டாம்பூச்சியே அருகில் வா

பட்டாம்பூச்சியே அருகில் வா

1 min
151

பட்டாம்பூச்சியே! பட்டாம்பூச்சியே! எங்கள் அருகில் வா!

குழந்தைகள் அழைக்கிறோம் எங்கள் அருகில் வா!

மரத்தின் மேலே பரக்கும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

அச்சமின்றி அழகாய்ப் பறக்கும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

அழகிய புள்ளிகளையுடைய இறக்கைகளைக் கொண்ட பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

பூக்களின் மீதமர்ந்துத் தேனைக் குடிக்கும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

தூரத்திலிருந்து அனைவரையும் மயக்கும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

அருகில் சென்றால் ஓடி ஒளியும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

சுதந்திரமாகப் பறந்துதிரியும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

சோகத்தினை மறக்கவைக்கும் பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!

பல வண்ண நிறங்களைக் கொண்ட பட்டாம்பூச்சியே எங்கள் அருகில் வா!


Rate this content
Log in