STORYMIRROR

hema malini

Others

4  

hema malini

Others

பெண்கள் புவியின்எச்சமில்லை🙏

பெண்கள் புவியின்எச்சமில்லை🙏

1 min
399

பெண்கள் புவியின்

எச்சமில்லை..!


 அச்சமில்லைஅச்சமில்லை...பெண்கள் புவியின் எச்சமில்லை...


பெண்களின்றி பிறவியில்லை...இப் புவியிவேதும் மிச்சமில்லை...


வீண் பழித்தலும் பெண் முடக்கலும் ஆக்கும் பழமை இன்று விதி முறித்தலும் முடி சூடலும் பெண்கள் உரிமை...


தாயறிவே பிள்ளைக்கென்றது விஞ்ஞானம் ...தனி பிறவி பெண்மையென்றது புவிஞானம்......



அரச சிங்கத்தையே முதலையுண்ணும் தண்ணீரின் வழியிலே...



 ஆண்டி அரசன் எவருமழிக்கும் ...பெண் கண்ணீரின் நெறியிலே



பெண்ணுரிமை முன்னுரிமை பெற்று பேருந்து பயணம் இலவசம் ...


தன்னுரிமை காக்கும் பெண்ணினமே உலக அரங்கில் பிரகாசம்...



அஞ்சரை பெட்டியில் முதல் உதவி அடுப்படி மருத்துவம் செய்தாள்...



பருவம் போல பகுத்தறிவிலும் படிப்படியாய் உயர்ந்தாள்...



ஆயுதம் ஏந்திய பெண் கடவுள் அரக்கனழித்து உதவி...


 தன்னில் பாதி தந்த சிவனில் சக்தி என்றும் ஆதி...



நதிக்கும் மதிக்கும் பூவிற்கும் பெண்ணோடு ஒப்புமை...


 பூவில் விதையாக்கும் புவியும் பெண்ணின் உவமை...



கலை அலை மலை மகளுடன் நீதி தேவியும் பெண்மை ...


பெண் எழுத்து இயக்க அறிவு யாதிலும் தலை நிமிர்ந்த நிலை உண்மை...



பெண்ணின் தொப்புள் கொடியால் கொடி கட்டி பிறவி செழிக்கும் ...


பெண் தொப்புள் கொடி பயனின்றி எந்த தேசியக்கொடி பறக்கும்...?



இ.டி. ஹேமமாலினி 

திருவள்ளூர் மாவட்டம்

சமூக ஆர்வலர்.


Rate this content
Log in