பெண்...!
பெண்...!
உச்சரிப்பில்
'நச்'சென்று
இதயத்தில்
அச்சாகும் சொல்!
அன்பையும்
நம்பிக்கையையும்
அகிலத்துக்கு
உணர்த்திய அற்புதம்!
அழகான உள்ளத்தில்
மெழுகாய் உருகும்
தியாகம்!
எதற்கும் தயங்காது
எதிர்த்து நிற்கும்
துணிவு!
உழைப்பு மட்டுமே
உணர்ந்த
களைப்பினைக்
காட்டாத அன்புத்தென்றல்!
சுகங்கள் துறந்து
குடும்பத்தின்
அகங்கள் குளிர்விக்கும்
அழகு தேவதை!
உறக்கம் தொலைத்து
மறக்காமல்
சிசு காக்கும்
அன்னையாய் ஓர் வடிவம்!
உடன் வளர்ந்து
வாழ்விற்கு
வசந்தமூட்டும்
சகோதரியாய் ஓர் தோற்றம்!
இறுதிவரை
உறுதியாய் உடனிருந்து
இல்லம் ஆள்பவளாய்
ஓர் வடிவம்!
மாற்றங்களை
எடுத்துரைத்து
நட்பை உணர்த்தும்
தோழியாய் ஒரு தோற்றம்!
எத்தனை வடிவங்கள்!
எத்தனை தோற்றங்கள்!
அனைத்திலும்
உம் தியாகம் அளப்பரியது!
பெண் என்ற
வடிவே
அகிலத்து அழகூட்டும்!
பெண்மையின் அன்பே
இதயத்தை
இனிமையாய்
இயங்கச் செய்யும்!
பெண்ணின் பெருமை
பாடாத கவிஞனுண்டோ?
பெண்ணின் புகழ்
சொல்லாக் காவியமுண்டோ?
பெண்ணின் மீது
பிரதிபலிப்பதால்தான்
கதிரவனும்
அழகுறுகிறான்!
பெண்மீது
வீசுவதால் தான்
தென்றலும்
மென்மையை
ஏற்றிக்கொள்கிறது!
பெண்மையின் அருகில்
இருந்து பார்!
உள்ளத்தில்
அமைதி வீசும்!
வாழ்வில் இனிமை
மேலோங்கும்!
மொழி தெரியாதவனுக்கும்
கவிதை வரும்!