பெண் என்பவள்???
பெண் என்பவள்???


குடும்பம் தன் கோவிலாக எண்ணுவாள், கோவிலில் தெய்வத்தை மனம் உருக வேண்டுவதோ குடும்பத்துக்காக!
உடல் வலிமை காட்டாமல், அன்பும், புத்தி கூர்மையும் காட்டுவாள்!
பெண் பிறப்பால் தான்,
ஆணுக்கும் பிறப்பு;
அவளுடன் தான் அவன் வாழ்வும் ஆகும் மிகச்சிறப்பு!
தாய் -- உலகில் நீ சுவாசிக்க, அவள் மூச்சடுக்கி உன்னை பெற்றுடுப்பாள்!
பாட்டி -- தாலாட்டி சீராட்டி, பாராட்டி வளர்ப்பாள்!
அக்கா -- எக்காலத்திலும் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவாள்.!
தங்கை -- இறுதிக்காலம் வரை கைக்கொடுப்பாள் !
தோழி
style="color: rgb(0, 0, 0);"> -- நட்புக்கு இலக்கணமாவாள்!
காதலி -- காதலின் ஆழத்தை உணர்த்துபவள்!
மனைவி -- உரியவனின் உயிர் காக்க போராடுவாள்!
மகள் -- கடைசி நொடி வரை உன் இறப்பு 'பொய்' என்று வேண்டுபவள்!
பெண் பாதுகாப்புக்கு தான் படைத்தான் ஆணை - ஆனால் முன்னுக்கு விடமாட்டான் அந்த பெண் மானை!
பெண் பாவம் சுமக்காதே,
ஆண் பலம் தாங்காதே - என்றுமே ஆணுக்கு பலம் பெண் இனமே!
பெண் என்பவளுக்குள் ஆண் உள்ளான்,
ஆண் என்பவனுக்குள் பெண் உள்ளாள் -- ஆனால்
பெண்ணுக்கு நிகர் பெண்ணே!பெண்ணே!!!
அழகுடன் உன்னை அடைக்கிக்கொள்ளதே!
நிறத்தால் உன்னை நிறுத்தாதே!
அழுகையால் உன்னை பலவீனமாக எண்ணாதே!
கண்ணீரை துடைத்திடு!
சார்ந்துதான் வாழ்வோம் என்ற எண்ணம் உடைத்திடு!
அறிவுதான் உன் அழியா அழகு என்று எண்ணிவிடு!!
நீ யார் என்பதை புரிந்துவிடு!!!
புதுமை பெண்ணே!!!
சுதந்திர பெண்ணே!!!!