ஒத்தையில நிக்குறேன்
ஒத்தையில நிக்குறேன்
1 min
851
தாயவள் பெத்துப் போட்டா
தனித்து என்னை விட்டுப்புட்டா
மழையும் வெளுத்து வாங்குது
உடம்பு எல்லாம் நடுங்குது
ஒதுங்க கூட இடமில்ல
வயித்துப் பசி ஆறல
வாரியணைக்க ஆளில்ல
ஒண்டி வாழ நிழலில்ல
அண்டிப் பிழைக்க வழியில்ல
ஆத்தாள அழைச்சேன் வரவில்ல
கத்தி நானும் பார்க்குறேன்
கண்டுக்கிட யாருமில்ல
ஒத்தையில நிக்குறேன்
உசுரு போக கத்துறேன்!
ஆதரவில்லா உலகத்துல
ஆண்டவனே எதுக்கு படைச்ச?
