STORYMIRROR

Arivazhagan Subbarayan

Others

5  

Arivazhagan Subbarayan

Others

நட்பு...!

நட்பு...!

1 min
26

நட்பு...!


நட்பின் எண்ணங்கள்

நியூரான்களில்

பாயும் வேகம்

எழுதும் கைகளுக்குத் தெரிவதில்லை!


நட்பெனும்

அன்புணர்வில் துடிக்கும் 

இதயம் பாய்ச்சும் குருதியால்தான்

இன்பம் ஒவ்வொரு செல்லிலும்

துளிர்க்கிறது!


உடல் துயரைக் காக்க

மருத்துவன் தேவை!

மனத்துயருக்கு மருத்துவனாய்

நண்பன் தேவை!


கல்லூரிக் கடலில்

படித்த புத்தகங்களுடன்

நட்பின் ஊடுவல்

வாழ்வின் பாதையை

வடிவமைத்தது!


பாதைகள் மாறிப்

பணத் தேடலின் நடுவே

மனத்தேடலை

முன்னிறுத்தியது நட்புதான்!


பள்ளியிலும், கல்லூரியிலும்

மூளையில் விழுந்த

பாடங்களை விட

இதயத்தில் விழுந்த

நட்பின் சொற்களே

இன்னும் உலவிக் கொண்டுள்ளன!


நாள்பட நாள்பட

மெருகேறும் வைரம் நட்பு!


விருட்சமாய் வளர்ந்தபின்

விழுதுகளாய்ச் சந்திப்புகள்

என்றும் நட்பைத் தாங்கும்!


அன்புக்கடலில்

கப்பலான உன்னை

அரவணைத்து 

அழைத்துச் செல்லும் நட்பு!


நட்பெனும் உறவு இன்றேல்

வாழ்வு

திசை தவறிய கப்பலாகும்!



Rate this content
Log in