STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

நம் சந்திப்பு

நம் சந்திப்பு

1 min
208

அன்பே,

உன்னைக் கண்டேன்...

கண்டதும் காணாமல் போனேன்!தேடினேன்...

உன் இதயச்சிறையில் சிக்கி தவித்தேன்!

என் இதயத்தை பரிசாக்கினேன்!காதலித்தேன்.... காதலில் மூழ்கினேன்!

கனவு கண்டேன்!

கரம் பிடிக்க எண்ணி...

நீயே என் தாரம் ஆக

உன் தகப்பனிடம் வரம் கேட்டேன்!

சாதி சனிதோஷம்...

அந்தஸ்து தேர் 

பள்ளம் நோக்கி இறங்கி வாரா 

பரிகாரம் விட்டு விலகிடு!

மீறினால் உயிருக்கு ஆபத்து! 

எச்சரித்தார்! என் செய்வேன்?

வாழ்வு அமாவாசையானது! 

தேவதை உன்னை காண்பேனோ?

என் விழி ஒளி பெறுமோ?

கனவு பலிக்குமோ? 

காத்திருக்கிறேன்!

நாம் சந்திப்பது...

 மணவறையிலா? பிணவறையிலா?



Rate this content
Log in