MS தோனி
MS தோனி


பலருக்கு எட்டாக்கனி....
ஜார்கண்டில் பிறந்து,
மட்டையை வளைத்து,
அடித்த பந்து,
எங்கோ! தொலைந்து, எங்கள் கண்களுக்கு விருந்து, பலருக்கு
நோய்த்திற்கும் மருந்து....
மட்டையுடன் நீ மைதானத்தில், எதிர் அணியோ திண்டாட்டத்தில், சிதறிய பந்தோ மறையுது வானத்தில்,
ரசிகர்களோ கொண்டாட்டத்தில்...ஆனால் நியோ! ஆரவாரமில்லா ஓரத்தில் ...
நிறைகுடம் தளும்பாது, எதிரே உள்ளவனுக்கு வியர்க்குது,
சிக்ஸர் அடிக்கும் உச்சதால் எதிர் அணியோ அச்சம் தழுவுது,
நீ இருக்கும் வரை இந்தியா என்றும் தோற்காது....
போர் குணத்தால் எதிரே இருப்பவன் வெற்றி கனவை வேர் அறுப்பாய், உன்னை நாடும் ரகசியம் கேட்கும் நம் ராணுவம்..
வித்தியாச கோணத்தில் மட்டையை கையில் சுழற்றுவாய்,
பல கோப்பையை சட்டை பையில் வைத்து சுற்றுவாய்...
உன் மட்டையுடன் பந்து திரும்ப திரும்ப முட்டி மோத ஏங்குது, ரசிகனின் மனதுக்கு பரிசளிக்குது..
மஞ்சள், நிலம், வெள்ளை.. வீரர் பட்டியலில் நீ இல்லை என்றால், அரங்கில் கைதட்டலே இல்லை....
மட்டையின் கைகளை பிடித்த உன் கைகளிலிருந்து பிறந்ததோ! தன்னம்பிக்கை...
எதிரணிக்கு சுழுக்குக்கு உதவியதால், உன் ஆயுதத்தால் சுளுக்கும் எடுத்ததால் அரங்கமே எதிரொலித்தது கேப்டன் கூல் என்று, உன்னைப்போல் யார் என்று.....
கடைசி ஒவேரியில் சிக்ஸர் அடித்து போட்டியை முடிப்பாய், பினிஷெர் என்ற பெயர் எடுத்தாய்...
கோப்பை ஏந்தும் நேரத்தில், உன் மகளை தூக்கினாய்..உன் மனதுடன் எங்களையும் சரண் அடைய வைத்தாய்...
தாயகம் மானம் காக்கும் ஆட்ட நாயகன்.
சகவீரரின் மனம் நோகாமல் வழி நடத்தும் என் தலைவன் (தல)
மூன்றாம் நடுவர் தீர்மானமோ நிலுவையில், அதற்கு முன்னால் உன் கூட்டமே கைத்தட்டலில்....
கோர்ட் போட்டு
ரயில் ஊழியராய் முடியவில்லை, உலக கோப்பை வாங்கும் முடிவில்...தடம் மாற்றினாய்..
வந்தயிடம் சிறு கிராமம்..
தெரியாமல் இருந்தோம் உன் சுயரூபம்..
பயிற்சியின் முயற்சியால் விஸ்வரூபம்..
உலகத்திற்கு என்றுமே நீ சிம்ம சொப்பனம்...
தோல்வி முனையோ உனக்கு!
இலக்கோ! எல்லை கொடு,
எதிரணியோ பல திட்டத்தோடு,
பந்து வீச்சாளர்க்கு பயத்தின் முனு முனுப்பொடு,
நமக்கோ பதட்டத்தோடு,
அதிரடி ஆட்டத்தை முடித்தாய் பொறுப்போடு,
திரும்பினாய் வெற்றி கோப்பையோடு,
உன்னால் பெருமை பெற்றது நமது நாடு....
மகேந்திர சிங் தோனி மனதில் மட்டையால் அடித்தாய் ஆழமாய் ஆணி.. என்றும் மறக்கமுடியாமல்....
வாழ்த்துகிறோம்
🙏🙏🏏🏆😊