மருந்தும் நானே.....விருந்தும் நானே
மருந்தும் நானே.....விருந்தும் நானே


உணவே உடலுக்கு ஆற்றலைத் தருகிறது!
உணவே செல்களைப் புதுப்பித்துக் கொள்கிறது!
உணவே நோயை எதிர்த்து உடலைக் காக்கிறது!
உணவை மருந்தாக்கினால்...
மருந்தை உணவாக்க வேண்டாம்!
அலங்காரம் செய்து கொள்ள அரைமணிநேரம்!
அத்தியாவசிய உணவுக்கு.... ?
உண்ண நேரம் ஒதுக்க மறுக்கும் மனிதன்....
மருந்து மாத்திரைகளை நேரம் ஒதுக்கி விழுங்குகிறான்!
உழைக்க அலுத்துக் கொள்ளும் மனிதன்....
சர்க்கரை வியாதி.... இரத்த அழுத்தம்.... தைராய்டு.....
கொழுப்பு..... என வகைக்கு ஒரு மருந்து....
பக்க விளைவுகளை மறந்து... !
பார்த்து.... பார்த்து.... உண்ண வேண்டிய உணவை.....
துணிந்து அருந்த வேண்டிய உணவை...
பயந்து பயந்து உண்டு....
பயந்து விழுங்க வேண்டிய மருந்தை.... துணிந்து உண்டு!
இரைப்பையைப் புண்ணாக்கி....
அதற்கும் ஒரு மருந்து!
அதன் நிலை மோசமானால்....
இதயமும் பாதிக்கப் படுகிறது!
விளைவு....
அதற்கும் ஒரு மருந்து!
இப்படியே மருந்தை உணவாக்கி....
மருந்திலேயே வாழும் மனிதா!
அடக்க வேண்டிய உணர்வுகளை அவிழ்த்து விடுகிறாய்!
அவிழ்த்து விட வேண்டிய உணர்வுகளை அடக்கி வைக்கிறாய்!
நேரத்திற்கு உண்டு....
நேரத்திற்கு உறங்கி....
நேரத்திற்கு உழைத்து....
வலுவாய் வைத்திருக்க வேண்டிய உடலை....
பிணிகளின் கூடாரமாக்கி....
நடமாடும் மருந்தகமாக்கி....
மாத்திரைகளே உணவாய்....
மருந்துகளே நீராய்....
ஊசிகளே உற்சாகப் பானங்களாய்....
நாளும் அருந்திடும் நீ....
ஒன்றை மறந்து விடுகிறாய்!
உணவே உடலுக்கு மருந்து!
உணவே உடலுக்கு விருந்து!
அதனால்...
இதை நீ உணர்ந்து
இனியேனும் திருந்து..... தவறிடின் வருந்து!