மனிதப் பிறவியும் வேண்டுமோ?
மனிதப் பிறவியும் வேண்டுமோ?
சொந்த பந்தம் வேராக்கி
சொர்க்கம் தனை உருவாக்கி
கர்ப்பத்தில் ஒரு கருவாக்கி...
காலம் எல்லாம் கனவாக்கி
காத்து நிதமும் உயிராக்கி...
உடலை வேறாக்கி...
உயிரை ஒன்றாக்கி....
காலமெல்லாம் கலந்து கிடந்து...
கைப்பிடித்து வாழ்ந்து நடந்து...
ஊனில் உயிரில் இரண்டல்ல
ஒன்றெனக் கலந்து கிடந்திட...
மரணமே!
சத்தமின்றி வந்து...
யுத்தம் ஒன்று நடத்தி...._ உயிரை
அஸ்தமிக்க செய்கிறாய் _ உடலை
அஸ்தியாக்க எரிக்கிறாய்!
சுற்றம்தனை மறந்தனை!
குற்றம் ஒன்று புரிந்தனை!
உறவை...
மறந்திட மனமும் துணிந்திடுமோ?
துறந்திட உயிரும் பணிந்திடுமோ?
கூற்றுவனே!
ஜென்மம் வேண்டும் என்று
ஒரு நாளும் வேண்டியதில்லை !
துன்பம் கொண்டு மடிந்திடவோ...?
வன்மம் கொண்டு மடித்திடவோ?
மாற்று உயிர் தருவாயோ?
வேற்று வழி சொல்வாயோ?
உடலை... உயிரை
உறவை.... உலகில்வாழ்வை
அன்பை ஆசையை
பற்றை பாசத்தை யெல்லாம் தந்து
நொந்து... நொந்து.... நாளெல்லாம்
பிரிவுத் துயரில் வெந்து மாண்டிட
மனிதப் பிறவியும் வேண்டுமோ?
