மலரும் நினைவுகள்...!
மலரும் நினைவுகள்...!

1 min

48
மொட்டைமாடிப் படுக்கை!
இரவைத் துரத்தும்
முயற்சியில்
தோற்றுப்போன
வெளிறிய நிலவொளி!
ஔிர்ந்து உதிரும்
நட்சத்திரங்களில்
புரியும் வாழ்க்கை!
பிறப்பும்
பிறப்பின் காரணமும்
புரியாத குழப்பத்தில்
ஊறித் தவிக்கும் மனது!
அக்கறைப் பசுமைக்கு
அலைபாயும் மனதின்
இச்சைகள்
இக்கறையில்
இருப்பதில் திருப்தியறியாது
இயங்கும் குழப்பம்!
மனக்குழப்பத்திற்கு
மலரும் நினைவுள் மட்டுமே
மருந்தாய் அமையும்!