STORYMIRROR

Uma Subramanian

Others

5  

Uma Subramanian

Others

மகாகும்பாபிசேகம்

மகாகும்பாபிசேகம்

1 min
1.9K

மின்விளக்கு அலங்காரங்கள்!

மாவிலைத் தோரணங்கள்

விளம்பரப் பதாகைகள்

சார்மினார் பந்தல்கள் 

கீற்றுப் பந்தல்கள்

சுற்றுப் பிராகரங்கள்! 

ஒலிப்பெருக்கி விளம்பரங்கள்!

கோபூஜைகள்

அஸ்வங்கள்

களிறுகள் காளைகள்

இளம்பிள்ளைகள்

சிவாச்சாரியர்கள்

ஆதீனங்கள்

அரங்கம் நிறைந்த கூட்டங்கள்

அங்கம் நிறைக்க உணவுப் பொட்டலங்கள்

யாகசாலைப் பூஜைகள் 

ஆறுகால பூஜைகள் 

மந்திர ஒலிகள்

மங்கல ஒலிகள் 

பக்திப் பாடல்கள் 

பரவசமூட்டும் பரத நாட்டிய ஆடல்கள்

பட்டிமன்றங்கள்

பக்தி இசைக் கச்சேரிகள்

தெய்வீக உரைகள் 

அரசியல் கரை வேட்டிகள்

வண்ண ஜாலங்கள் 

வர்ண ஜாலங்கள்

வானவேடிக்கைகள்

வாத்திய முழக்கங்கள்

ஹெலிகாம் ஷூட்டுகள்

ஹெலிகாப்டர் ஸ்பிரேக்கள்!

செல்ஃபி கூட்டங்கள் 

ஸ்டேட்டஸ் பரிமாற்றங்கள்

காவல்துறை அணிவகுப்பு!

கார்கள் வண்டிகள் சாலை ஆக்கிரமிப்பு!

விஐபிக்கள் வருகை! 

காலை மாலை விசிட்டிங் 

கட்செவியில் அப்டேட்டுகள்!

களைக் கட்டியது விருதை மண்!

எங்கு திரும்பிடினும்

ஈசனின் பண்!

மக்கள் திரை ...

தரை மூடியது!

கரை புரண்டது!

மணிமுத்தாறு மனிதக் கடலானது!

மனிதக்கடல் அலையில்

மகாகும்பாபிஷேகம்!

மகேசன் மனம் குளிர்வடைந்தது !

மகிழ்வோடு நிறைவடைந்தது!


Rate this content
Log in