மிருகங்கள் எங்கே
மிருகங்கள் எங்கே
1 min
550
மனிதனுள் மிருகம் வாழ்கிறது
மிருகத்தினுள் மனிதம் வாழ்கிறது!
காடுகள் நாடுகளாகின்றன
நாடுகள் காடுகளாகின்றன!
மதமும் மொழியும் மனிதனை கொதித்து எழச் செய்கின்றன!
இனமும் எல்லையும் வெடிகுண்டாக வெடிக்கின்றன!
காமமும் களவும் அரிவாளோடே கத்தியோடே காவு வாங்குகின்றன!
காடுகள் அமைதியாகின்றன
நாடுகள் அமர்க்களமாகின்றன!
