STORYMIRROR

hema malini

Others

4  

hema malini

Others

கனவுக்காலம்🤗🤗

கனவுக்காலம்🤗🤗

1 min
2

 


மழலைகள் 

கனவுக்காலம் 

தூக்கத்தில் சிரிப்பது...


பள்ளிப்பருவ

கனவுக்காலம் 

தூக்கத்தில் பதறி விழிப்பது...


இளமை கால 

கனவுக்காலம் 

இன்ப உலகில் 

திளைப்பது...


கனவுக்காலம் 

பாம்புவந்தால் 

பதிலாய் பல 

பயமுறுத்தல்கள்...


காதல்காலம் 

கனவுக்காலம்...அதில் 

கற்பனையில் மிதப்பது..


கனவுக்காலம் 

கோடியில் வாழ்ந்து 

எழுந்து பார்த்தால்...வேட்டி 

கிழிந்த கோலம்...


ஆன்மாவின் 

ஆளுமையும் 

ஆழ்மனதின் 

கற்பனையும்..


இயலாமை 

சிந்தனையும் 

சந்தோச 

சாதனையும் ...


கனவுகளின் பட்டியலாய் 

கனவுக்காலம் 

தோன்றிடுமே...


விழித்திருந்து

கனவுகண்டால் 

விபத்தாக 

வாய்ப்புண்டு...


விழிமூடி 

கனவுகண்டால்

விந்தைகளின் 

பட்டியலுண்டு ...


லட்சிய

கனவுகளால் 

முன்னேற்றம் 

விளையலாம்...


அதிகாலை கனவு பலிக்குமென்று 

அச்சுறுத்தல் 

வருவதுண்டு...


ராசாவாய்

கனவுகண்டு 

ராணியோடு 

உலாகொண்டு...

பணிப்பெண்ணுடன் 

பவனிவந்து...


விடிந்ததும் 

காலை பிச்சைக்கு 

திருவோடு தேடும் 

வீண்கனவு எதற்கு...


சில கனவுக்காலம் 

இறைபக்தியின் காட்சி...

சில கனவுக்காலம் 

எச்சரிக்கைகளின் சாட்சி...


சில கனவுக்காலம் 

உன்னை முடக்கும் சூழ்ச்சி...


சில கனவுக்காலம் 

உன் வளர்ச்சிக்கான ஆட்சி...


மனம் கொண்டது 

கனவு...

களம் கண்டது 

வரவு...


விரயம் கண்டது 

செலவு...

விபரம் கொண்டதே 

வாழ்வு...


வீண் கனவில் மூழ்கி 

ஆயுளை கழிக்காதே...

கானல்நீர் கண்டு 

நீந்த நினைக்காதே...


வீண் கனவை 

பலியிடு...நற் 

செயலில் 

பீடுநடை போடு...


கனவில் பெற்ற இன்பம் 

சில...

வெளியில் சொல்ல 

சில...

நமக்கு

ள் முடக்கிக் கொள்ளவே......


Rate this content
Log in