STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

கனவுக் காதலியே

கனவுக் காதலியே

1 min
327

உன் அழகிய வதனம் கண்டேன்!

பெளர்ணமித் திங்களாய்  வெள்ளொளி வீசியது! 

உந்தன் கயல்விழிகளைக் கண்டேன்!

கருவண்டு இரண்டு அங்கும் இங்கும் பறப்பதாய் உணர்ந்தேன்!

கண்ணிமைக்கும் வேளையில் காந்தமாய் ஈர்த்தாய்!

செவிகள் இரண்டினைக் கண்டேன்!

ஏன் இன்னும் தாமதம்? என கேள்விக்கு கணைகள் தொடுப்பதாய் உணர்ந்தேன்!

 நாசிகளை கண்டேன்! உன் மூச்சுக் காற்றின் வெப்பம் மார்கழி கடுங்குளிருக்கு இதமாய் உணர்ந்தேன்! உன் உடலைப் போர்வையாக்கினேன்! 

உன் இதழ்களை கண்டேன்! இரு ரோஜா இதழ்கள் பன்னீரைச் சொரிந்து நின்றது!

மெல்ல இதழ்களைச் சுவைத்தேன்!  

திகட்டாத தேனாய் இனித்தது! 

மெல்ல புரண்டேன்! 'மடார்' சத்தம்!

வலி தாளாமல் கதறித் துடித்தேன்!

ஐயகோ...!

கனவில் வந்து கிளர்ச்சியூட்டும்... 

என் கனவுக் காதலியே! 

என்று நேரில் வந்து அதிர்ச்சியூட்டுவாய்?

தினமும் கனவில் திளைக்கிறேன்....

உன் நினைவில் வாடி இளைக்கிறேன்!

நேரில் வந்து நின்று விடு!

நிஜத்தில் காதலை தந்து விடு! 


Rate this content
Log in