STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

கள்வனின் காதலி

கள்வனின் காதலி

1 min
361

அலைபேசியே...!

கூடிக் குலவி... பேசி மகிழும் சுற்றத்தை...

கண்களால் கலந்து மனதில் நிறைந்த 

புத்தகத்தை..... 

விரும்பிய பாடலை... செய்திகளைத் 

 தரும் வானொலியை.. 

ஆரோக்கியம் ஆற்றலைத் தரும் விளையாட்டை....

மகிழ்ச்சி தரும் நண்பர்களை.. 

நேரம் காட்டும் கடிகாரத்தை ....

அழகிய முகம் காட்டும் புகைப்படக்கருவியை...

சுடச்சுட செய்திகளைத் தரும் செய்தித்தாளை....

வரவேற்பறையில் கண்டு மகிழ்ந்திடும் காணொளியை... 

பயணத்தில் இனிமை தரும் இயற்கையை....

உணவை....

உறக்கத்தை....

உத்தியோகத்தை....

உறவுகளை....

மறந்தேன்.... எல்லாவற்றையும் துறந்தேன்!

நினைந்தேன் உன்னழகில் நனைந்தேன்! 

தொலைந்தேன் உன்னில் தொலைந்தேன்!

சத்தமின்றி.... நித்தம் நித்தம்.... பித்தனானேன்!

எனை மயக்கிய காதலியே...

நீயின்றி நானில்லையே!

முப்பொழுதும் நம் சங்கமங்கள்... 

ஒன்றிரண்டா உன் நினைவலைகள்! 

 முப்பொழுதா? 

இல்லை... இல்லை ...

எப்பொழுதும் 

என் மார்பில்....

என் கரங்களில்....

என் மடியில்....

என் தலையணையில்

 என்னோடு உறவாடி

என் கண்களை....

என் நேரத்தை...

என் எண்ணத்தை...

என் இதயத்தை...

கொள்ளையடித்த...

 நீயே.... இந்த 

கள்வனின் காதலி!


Rate this content
Log in