இறையே சரணம்...!
இறையே சரணம்...!
1 min
37
சிந்தையில் தெளிவும்
சீர்கூர் மதியும்
எந்தையே எமக்கருள்வாய்
உந்தனுடன்
உறைந்துய்யும் நாளேயென்துன்பச்
சிறையறும் நாளாம்!
நின்சீரடி சரணம்!
அகந்தையை அறுக்க
ஆசை ஒழிக்க
இகழ்புத்தி இன்றேதொலைக்க
சுகந்தமலரைச்
சூடியஇறைவன் திருவடியழகை
நாடிச் சென்று
நற்கதி யடைவோம்!
யாக்கையும் மனதும்
தேக்கிய கசடைத்
தூக்கி யெறியத்
துணைவா அருள்வாய்!
ஊக்கமுடன்
உன்னடி தினமும் தொழுதிடும் உள்ளம்
இன்னல் அகற்றி என்றும் அருள்வாய்!