இளமையும் முதுமையும்
இளமையும் முதுமையும்
1 min
140
உணவை நாடிடும் உறவைத் தேடிடும்
அச்சம் கொண்டிடும் அபயம் வேண்டிடும்
தனிமை மறுத்திடும் தன்னுரிமை உரைத்திடும்
இதழ்கள் மலர்ந்திடின் இன்பம் புலர்ந்திடும்
முகந் திரிந்திடின் அகம் சரிந்திடும்
சுற்றம் சூழ்ந்திடின் குற்றம் அழிந்திடும்
ஈன்றதைக் கண்டால் துன்பம் பறந்திடும்
இளமையும் முதுமையும் ஒன்றெனக் காண்
