சுதந்திரம்
சுதந்திரம்
ஏன் பெண்ணாய் பிறந்தேன் என சில சமயம் வருத்தமே...
பெற்றோர் வீட்டிலும் என் மனதில் பட்டதை சொல்ல முடியவில்லை
உனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுனு எங்களுக்கு தெரியும்
நாங்க எப்பவும் உனக்கு நல்லது தான் செய்வோம் என
என் விருப்பத்தை எதற்கும் கேட்காமல் போக
அவர்களின் மனம் போல் வாழ்ந்தேன் என் ஆசைகளை கொன்று....
கல்யாணம் செய்து கொண்ட போன இடத்திலாவது
கட்டிக் கொண்டவன் என் உணர்வுகளை மதிப்பான்
என் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் தருவான் என நம்பினேன்
ஆனாலும் ஏமாந்து போனேன்
எவ்வளவோ அன்பு காட்டியும் அக்கறையாய் பார்த்துக் கொண்டும்
குடும்பம் நடத்தி கணவன் குழந்தை என அதற்குள்ளேயே சுழன்றாலும்
எவரிடத்தும் எந்தவிதமான ஆறுதலோ பாராட்டோ ஊக்குவிப்போ
எதுவும் கிடைக்காது ஏன் தான் வாழ்கின்றோம் என அறியாது
எனக்கு என்ன பிடிக்கும் என்பதும் மறந்துபோய் உலவுகிறேன்...
என்றாவது ஒருநாள் ஒரே ஒருநாள் மட்டும்
என் மனதிற்கு பிடித்தாற் போல் சுதந்திரமாய்
என் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு
நான் நானாக இருக்க வேண்டும்.....!!!
இது எனது நீண்ட நாள் ஆசை ஆனால்
இது இன்னும் கனவாகவே இருக்கின்றது...!!!
- நித்யஶ்ரீ சரவணன்
