சதி(தீ)
சதி(தீ)


காலங்கள் மாறிவிட்டது!
சமுதாயம் வளர்ந்து விட்டது!
கல்வியறிவு பெருகிவிட்டது!
விஞ்ஞானம் விண்ணைத்தாண்டி சென்று கொண்டிருக்கிறது!
எல்லாம் எங்கோ போனாலும்
சா (தீ)தி மட்டும் சமுதாயத்தை.....
எங்கோ ஓர் மூலையில் கொழுந்து விட்டுஎரித்து கொண்டுதான் இருக்கிறது!
சிதைமூட்டி எரித்த சதி கூட... எத்தனையோ போராட்டத்திற்கு பின் எரிந்து சாம்பலானது!
சதி செய்து எரியவிட்ட சா(தி)தீ மட்டும்
அணையாமல் கணன்று கொண்டு தான் இருக்கிறது!
சா(தீ)தியின் காலுடைத்து....
கணன்று கொண்டிருக்கிற தீயில் போட்டு சதி செய்யாதவரை....
எங்கோ ஓர் மூலையில் மக்கள் எரிந்து கொண்டுதான் இருப்பர்!
மனிதனில் மனிதம் தோன்றாதவரை......
எத்தனை பெரியோர்கள் எவ்வளவு......
தம் கட்டித் தள்ளினாலும் சாதியை
ஒன்றும் செய்ய முடியாது!
ஆங்காங்கே சாதி என்னும் படலம்....
சதி( தீ),யில் பல சடலத்தை .....
எரியூட்டத் தான் படுகிறது!
தீண்டாமையை ஒழிப்போம்!
மனித நேயம் காப்போம்!