சொல்லியழு
சொல்லியழு
தள தள வென்ற உன் சிவந்த மேனி கண்டு நாவில் சுவையூறி நின்றேன்!
உனை அப்படியே கடித்து தின்றேன்!
மெல்லிய துகிலும்...
இனிப்பு கலந்த புளித்த சுவையும் எங்கே?
உன் சிவந்த மேனி எங்கே?
கரைத்தால் கரைவாய்!
சுவைத்தால் நிறைவாய்!
தூக்கி வீசினால் உயிர் பெற்று வளர்ந்து வளம் தருவாய்?
இன்றோ!
உள்ளம் கல்லாய் ஆனது!
உருமாறி எல்லாம் போனது!
(நிறம் ....சுவை... தரம்... )
விம்மி அழுகிறாய்!
பொங்கி எழுகிறாய்!
நுரை தள்ளுகிறாய்!
மக்கள் குறை சொல்லுகிறார்!
ஏன்?
சிவந்த மேனியில் கண் பட்டு புண் ஆனதால் கலங்கினாயோ?
மலடியானதை எண்ணி மனம் வருந்தினாயோ?
பிஞ்சிலேயே பழுத்ததை நினைத்து பேதை உன் நெஞ்சம் துண்டானதோ?
ரசாயனம் பட்ட காயத்தின் வலியில் துடித்தாயோ?
சொல்லி அழு
