சமூகமே ....
சமூகமே ....


சமூகமே!
நதியை….. புனலை….. ஆழியை….
பூமியை பெண்ணென்றாய்!
பெண்ணை… தெய்வம் என்றாய்!
பெண்ணை பூவையர் என்றதாலோ?
பூவாய் மோர்ந்து பார்த்து…
காலில் போட்டு மிதிக்கிறாய்!
கரங்களில் அள்ளி கசக்குகிறாய்!
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடிய வள்ளலார் பிறந்த மண்!
பாட்டி…. பருவ மங்கை…. பள்ளி செல்லும் குழந்தை
ஏன் பச்சிளங்குழந்தை!
ஒன்றையும் விட்டுவைக்க வில்லை நீ!
விலங்குகளைப் பலியிடுவது போல்!
தீயிலிட்டு புழுவாய் எரிக்கிறாய்!
கத்தியால் கழுத்தை அறுக்கிறாய்!
என் சொல்வேன்? காலக் கொடுமைகளா?
சமூகத்தின் பாதைக் கோளாறா?
பார்வைக் கோளாறா?
போதைக் கோளாறா?
பூமியே….. நீயும் ஒரு பெண் எனில்…
நீ இன்னும் இதையெல்லாம் மடி தாங்குவது ஏன்?
பெண்களின் வாழ்க்கையை கடிதாக்குவது ஏன்? கூறு!