சக உதிரன்
சக உதிரன்
சகோதரன்...... சக உதிரன்!
விதைகள் வேரானாலும்...
ஒரு மண்ணில் முளைத்த செடிகள் நாம்!
ஒரு கூட்டில் வாழ்ந்த குருகுகள் நாம்!
ஒரு கொடியில் மலர்ந்திட்ட மலர்கள் நாம்!
சிறகை விரித்து பறந்த போது....
திசைகள் மாறியது!
கருவில்.... உருவில்...
உள்ளத்தில்..... உதிரத்தில்....வேறுபடலாம்!
நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போது....
நீ என் தோழன்!
நான் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் போது....
நீ என் சகோதரன்!
நான் துன்பங்களைச் சந்திக்கும் போது.....
நீ என் தந்தை!
நான் உன்னோடு சண்டையிட்டுக் கொள்ளும் போது.....
நீ என் பரம எதிரி !
நீ அவ்வப்போது எதுவாக இருப்பினும்....
எப்போதும் நீயே என் பலம்!
நீ என்னோடு இருந்தால் ஆயிரம் படை பலம் கொண்ட அரசனானேன்!
என்னை விட்டு நீங்கினால் வேரிழந்த மரமாவேன்!
உதிரம் உள்ளவரை நீ..... நீயே தான்!
உன் பலத்தில் நான்!
சக உதிரா..... உன் பலம் இதுடா !