STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

சிரம் தாழ்கிறேன்

சிரம் தாழ்கிறேன்

1 min
313

உகந்த இடம் தேடி...

தெருவெங்கும் அலைந்து திரிந்து...

சிறகுகளும் சோர்ந்தே போயின!

தகுந்த இடம் ஒன்று கண்டேன் 

தஞ்சம் இதுவென்று புகுந்தேன் 

அஞ்சி.... அஞ்சி நாளும்

அயராது அரும்பாடு பட்டே

மஞ்சம் ஒன்று அமைத்தேன்....

மீட்டர் பாக்ஸினுள்!

பார்ட்னருடன் என் இனம் பெருக....

துஞ்சி சிரம் தாழ்கிறேன்!

 வஞ்சம் ஒன்றும் செய்திடாதீர்!

குஞ்சு வளர்ந்திட.....

குடிபெயர்வோம் மரக்கிளைக்கு! 

கொஞ்ச நாள் பொறுத்திடுக!


Rate this content
Log in