அன்றில் பறவைகள்
அன்றில் பறவைகள்
காடு மேடும் சுற்றி வரும்....
காத தூரம் கடந்து வரும்!
மழை வெள்ளத்தில் மூழ்கி வரும்!
மண்ணின் சூட்டைத் தாங்கி வரும்!
கல்லும் முள்ளும் குத்தும் போதும்...
கண்ணீர் விட்டு அழுததில்லை!
கால் கடுக்க நின்ற போதும்...
வாய்க் கிழிய புலம்பியதில்லை!
கஷ்டப்பட்டு உழைத்த போதும்...
கட்டியணைத்து நாம் இதழ் பதித்ததில்லை!
விலை கொடுத்து வாங்கிய போதும்...
வாசலைத் தாண்டி அழைத்ததில்லை!
சேற்றிலே விழுந்து புரண்ட போதும் ...
சகதியிலே உழன்று தவித்த போதும்...
சலித்து நம்மைப் பார்த்ததில்லை!
எத்தனை எத்தனை துன்பங்களை
நமக்காகத் தாங்கினாலும்...
தம் இணை பிரிய தாங்கியதில்லை!
தனித்து நீங்கள் வாழ்ந்ததில்லை!
காதலில் நீங்களும் அன்றில் பறவைகளோ?
