ஆஸ்தியே..... ஆரோக்கியம் தான்!
ஆஸ்தியே..... ஆரோக்கியம் தான்!


இளம் வயதில்.....
உணவைத் துறந்து.....
வேலை.... வேலையென....
மூச்சு முட்ட ஓடியாடி....
உழைத்து.... களைத்து....
மூச்சு வாங்கி உட்கார்ந்த பின்பு தான் தெரிகிறது!
மூன்று வேளை உணவிற்குத் தான் ஓடியிருக்கிறோம் என்று!
அதற்குள் களைத்துப் போனது உடல் மட்டுமா? என்றால்....
இரைப்பையுந்தான்!
அமிலத்தால் நிறைந்து.....
வெந்து.... நைந்து...
தன்மையை இழந்து...
சீரண மண்டலம் செயலிழந்து....
நரம்பு மண்டலம் நடுக்கமுற்று...
தசைமண்டலம் வலுவிழந்து....
மனம் தளர்வுற்று....
உடல் தன் நிலை தடுமாறுகிறது!
ஆறாப்புண் குடலை மட்டுமல்ல....
உடலையும் அரித்து விடுகிறது!
இரப்பராய் வளைந்த உடல்...
கண்ணாடியாய் கையாள வேண்டுகிறது!
காரம்... புளிப்பு ..... கசந்து விடுகிறது!
மசாலாப் பொருட்கள் மடித்து விடுகிறது!
நேரம் பார்த்து வேலைக்கு ஓடியக் காலம் போய் ....
நேரம் பார்த்து சோற்றுக்கு அலைய வேண்டி இருக்கிறது!
கண்கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் என்ன புண்ணியம்?
சுவர் இருந்தால் தானே சித்திரம்!
உடைந்த பொருள் ஒட்டினாலும்....
பழைய நிலைக்கு திரும்பிடுமா?
அன்றாட அட்டவணையில் சோற்றுக்கே முதலிடமஂ!
முப்பொழுதுக்கு முப்பது நிமிடம்!
தவறிடின்.... முப்பொழுதும் வேதனை தான்!
உறக்கம் கூட ஒரு சோதனை தான்!
ஓடுங்கள் ஒருபோதும் உட்கார்ந்து விடாதீர்கள்!
உண்டு விட்டு ஓடுங்கள்!
ஆரோக்கியத்தைத் தொலைத்து ஆஸ்திகளைத் தேடாதீர்கள்!
ஆஸ்தியே ஆரோக்கியம் தான் ஒருபோதும் மறந்து விடாதீர்கள்!