விலங்கு
விலங்கு


தாழ்த்தப்பட்ட குலத்துல பிறந்தது என்னுடைய தவறு கிடையாது.
அதுக்காக வேறு குலத்துப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்துட்டா நீ உயர்குலத்துல பிறந்ததா அர்த்தமாயிடுமா?
அப்ப ஏன் எங்களை மட்டமா நினைக்கணும்?
நீங்க எல்லாம் ஒரு நல்ல இடத்தில் பணி கிடைத்து வரணும்னுதான் உங்களுக்கு எல்லா சலுகைகளையும் கொடுக்கிறாங்க. ஆனால் நீங்க குடிச்சிட்டு ஒரு பெண்ணோட திருமண வாழ்க்கை அமைச்சுக்கறது கிடையாது. இதுல திருமணம் ஆகாமலேயே குழந்தை பெத்து ரோடில் போட்டு போறீங்க! நீ செய்யலைன்னாலும் நீ சொல்ற சாதி,குலத்தில் இருக்கு இல்லையா.............எதுக்கு உனக்கு இந்த கயிறு?
ஒவ்வொரு இடத்துலயும் எங்களை நாங்க அடையாளப்படுத்திக்கறதுக்குத்தான் இந்த கயிறு. இதுல எங்க அம்மா,அப்பா,கடவுள் இவங்க படமும் வச்சிருக்கேன்.
சாதி இரண்டொழிய வேறில்லை....இல்லையா?
அப்ப திருமணமும் அப்படித்தானே!
இல்லை! நாம ஆதிகாலத்திலிருந்தே தொழிலில் ஒரு குழுவாக வாழப் பழகி்ட்டோம். அது அப்படியே ஒரு சாதி,மதம்னு பண்பாடு,மரபுன்னு மாறி வந்திருக்கு... இப்ப சாதி மாறி நான் உயர்குலத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ளப்போறேன்னு சொன்னால் அந்த பழக்கத்துக்கு ஏற்ப நீ மாறிக்கணும்! அது உன்னால் முடியாது. குடும்பத்துல பிரச்னைகள்,டைவோர்ஸ் எல்லாம் வரும். இப்ப சாதி விலங்குன்னு உனக்கு இந்த கயிறை போட்டுக்கறே!
இப்ப கட்சி,தேர்தல் என எல்லா இடங்களிலும் சாதி,மதவாரியாகத்தானே சீட் தர்றாங்க!
அதைக் கணக்கு பண்ணித்தானே நம்ம நாட்டோட ஒற்றுமையை குலைச்சு தொழில்வளத்தை நாசம் செய்யறாங்க!
அப்ப எது சாதி?எது மதம்?
நம்ம ஒரு குழுவா வாழ ஒரு கிராமத்திலேயோ,நகரத்திலேயோ வாழும்போது அவரவர் கொள்கைக்கு கட்டுப்பட்டு மரியாதை கொடுக்கும்போது உருவாவதுதான் உண்மையான அன்பு. இந்த அன்புக்குள்தான் சாதியும்,மதமும் அடங்கி இருக்கு!
.நம்மை அழிக்கணும்னு ஒருத்தன் எங்கே இருந்தோ வரலை!
நம்ம சாதி,மதம் அப்படிங்கற நச்சுப் பாம்புகளை காற்றில் விஷக்கிருமிகளாகப் பரவவிட்டு சுயநலமா சாதிச்சுக்கிறாங்க! சாதி,மதம்ங்கிற விலங்கை உடை! அந்நியப் பொருளை வாங்காதே! சாதி,மதம்னு பேசாதே! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்து கிடக்கும். அது எல்லா சாதி,மதம் இன ஆட்களுக்குள்ளும் இருக்கும். புரிந்து நடந்து கொள்! நீ அடுத்த வருடம் இருக்கும் அளவைப் பார்!