திருத்திய நட்பு
திருத்திய நட்பு


சோனா பூனையும்,மீனா பூனையும் நண்பர்கள்.
ஒருநாள் இருவருக்கும் ரோஸ்மில்க் குடிக்க ஆசை வந்தது.
அவர்கள் வசித்துவந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய கடையில் ரோஸ்மில்க் விற்பதைப் பார்த்ததில் இருந்தே சோனாவிற்கு ரோஸ்மில்க் சாப்பிட ஆசை அதிகமாகியது.
கேட்டுவிட்டால் என்ன? என சோனா மீனாவிடம் கேட்டது.
நான் ஏற்கனவே பால்கோவா இந்தக்கடை ஓனர் பையன் கடையிலிருந்து
திருடியிருக்கேன். பாவி! கட்டையில் போறவன் இத்தனூண்டு பால்கோவா திருடியதற்கு ஒரு பாத்திர வெந்நீரைத் தலையில் ஊத்திட்டான்.பாரு! என்தலையை! எனக் காட்டியது. கையும் களவுமா மாட்டிய தருணத்திலே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா!
நல்லவேளை! கொல்லாம விட்டானுங்களே!
உழைத்து வாழவேண்டும்னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன?
என்ன மீனா! நீயும் நம்ம கெட்ட அரசியல்வாதிகள்மாதிரி பேச ஆரம்
பிச்சுட்டியா?
நாம வேலை செஞ்சு அதுல வரதுல சாப்பிடறதுதான் மகிழ்ச்சி…
நமக்கு யார் வேலை தருவா?
சரி! நான் அந்த கடையில் வேலை கேட்கிறேன். என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
சரி!
ஐயா! என் பெயர் சோனா பூனை. எனக்கு ஒரு வேலை தாருங்கள்.
பசி அதிகமாக இருக்கிறது.
சரி! உனக்கு என்ன வேலை தெரியும். எலிகளை விரட்டிப் பிடிப்பேன்.
சரி! என்கடையிலும் எலித்தொல்லை அதிகம். என்ன சம்பளம் வேண்டும் உனக்கு!
இரண்டு எலி பிடித்தால் ஒரு கப் ரோஸ்மில்க் வித் ஒரு பிஸ்கட்.
அது போதுமா சோனா!
போதும் கடைக்காரரே!
சோனா இரண்டு எலியைப் பிடித்துக்கொடுத்து வாங்கிய கப் ரோஸ்மில்க்கையும்,பிஸ்கட்டையும் மீனா பூனையிடம் கொடுத்து அதன் சொட்டையாகிப்போன தலையை அன்புடன் தடவிக்கொடுத்தது.