தீபாவளி 'பேண்ட்'
தீபாவளி 'பேண்ட்'


டிசம்பர் 1, 2019
உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் கொண்ட அழகிய தருணம்!
சுமார் ஐம்பது வருடத்திற்கு முந்தைய ஒரு தீபாவளித் திருநாள். எனக்கு சுமார் பத்து வயது இருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கு ஓரிரு தினங்களுக்கு முன் தான் புதுத்துணி வாங்குவார்கள். எப்பொழுதும் ரெடிமேட் அரை ட்ராயர் தான் வாங்கித்தருவார்கள் அதுவும் நாடா வைத்தது! அந்த முறை எப்படியாவது ‘பேண்ட்’ எடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசையாக இருந்தது! அது என் பெருங்கனவு என்றும் சொல்லலாம். ஆனால் என் வேண்டுகோளை யாரும் ஏற்றதாகத் தெரியவில்லை. முதல் நாள் இரவு வரை எதுவுமே வாங்கவில்லை. மிகுந்த கவலையுடன் இருந்த நான் அழுது கொண்டே தூங்கி விட்டேன்.
திடீரென இரவு இரண்டு மணி அளவில் என்னை எழுப்பினார்கள். என் கண் முன்னே இருந்தவைகளை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு பை நிறைய பட்டாசும் திண்பண்டங்களும் – அதை விட முக்கியமாக என் கண் முன்னே ‘பேண்ட்’டையும் காட்டினார்கள். அப்போது, அந்த தூக்கக் கலக்கத்திலும் கூட, என் இதயம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் பறந்த அந்த தருணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.