ராக்கி கயிறு
ராக்கி கயிறு


பாட்டி தனது தம்பி பாலுவிற்காக ராக்கி கயிறு வாங்குவதற்காக முகத்தில் முகமூடி மாட்டியபடி வேகமாக வீட்டை விட்டு கிளம்பினாள். எதிரே வந்த பாட்டியின் பேத்தி பத்து வயது அனு ஏன் பாட்டி வெளியே கிளம்புகிறீர்கள்? எனக் கேட்டாள். தனது தம்பி பாலுவிற்காக ராக்கி வாங்கப் போவதாகச் சொல்லிவிட்டு நடையைத் துரிதமாக்கினாள்.
அனு அப்பனிடம் சொல்லி தம்பிக்கு எதுவும் செய்யவிடமாட்டாளோ என்ற பயம் பாட்டியின் கண்ணில் அப்பட்டமாகத் தெரிந்தது. மகனாக இருந்தாலும் கூடப் பிறந்த அக்கா நித்யாவிடம் சண்டைக்கு நிற்பவனுக்கு ராக்கி கயிறு பற்றி எப்படித் தெரியும்? கடையில் எல்லாம் பழையதாக இருந்தன. கொரானா என்பதால் புது ஸ்டாக் எதுவும் வரவில்லை என்று கடைக்காரர் கூறியதை நினைத்து பாட்டி வருத்தமடைந்தாள்.
பாட்டி யோசித்தபடி கடையில் கருப்பட்டி வாங்கிவிட்டு வீடு திரும்பினாள். வீட்டில் மகள் நித்யா சத்தம் கேட்கவே மகிழ்ச்சியானாள். பாட்டி! அப்பாவும், நானும் இந்த ராக்கி கயிறு செஞ்சோம்! நன்றாக இருக்கிறதா..உங்களுக்காகத்தான் இது....... பாட்டியைக் கட்டி அணைத்தவாறு உங்க தம்பிக்குக் கட்டுங்க! என்றாள்.
அப்பா அத்தைக்கு கட்டுவார்........