KANNAN NATRAJAN

Children Stories Drama

4.1  

KANNAN NATRAJAN

Children Stories Drama

பர்த்டே கேக்

பர்த்டே கேக்

1 min
174


பாட்டி!

என்னடா!

நம்ம எல்லோரும் சேர்ந்து பர்த்டே கொண்டாடலாமா?

ஓ! தாராளமாக…..

யாருக்குடா?..உனக்கா! ………

இல்லை….. உங்களுக்கு…. என இழுத்தான்.

என்ன சந்துரு..உன் பையன் எனக்கு பர்த்டே கொண்டாடணும்னு சொல்றான்….

எப்பவும் உன் பிறந்தநாளைக்கே எனக்கும் மெழுகுவர்த்தி வைங்கன்னு சொல்வான்.

இல்லை பாட்டி…பர்த்டே இனிமே கேக் வெட்டி பார்ட்டி வைத்து எல்லாம் கொண்டாட வேண்டாம்.சிம்பிளா போதும்.

ஏன்?

அப்பா கேட்டதற்கும் பதில் ஏண்டா சொல்ல மாட்டேங்கறே!

அம்மா வேறு ஊர்ல வேலை பார்க்கிறாங்க..இதுக்காக அவங்க நிறைய செலவு செய்யறாங்க………

பொய் சொல்லாதே… நீ அதெல்லாம் கணக்கு பார்க்கமாட்டேன்னு எனக்குத் தெரியும்.

இன்னைக்கு எங்க டீச்சர் பள்ளியில் ஒரு டாகுமெண்டரி படம் போட்டாங்க..அதுல அனாதை இல்லம்,ஆதரவற்றோர் இல்லம் அப்படின்னு வந்தது. அதில் ஒரு பாட்டி தன் வசதிக்கு மீறி குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து கடைசியில் பிள்ளைகள் அவர்கள விட்டு வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுவதையும்,வெறும் பணம்தான் அவர்களுடன் இருப்பதையும் காட்டினார்கள். அதே முதியோர் இல்லத்தில் பிள்ளைகள் பாராமுகமாக இருப்பதனால் வசதி இல்லாதவர்கள் இருப்பதையும் காட்டினார்கள்.

சந்துரு தனது அப்பாவை ஒருமுறை பார்த்தான்.

ஏம்பா! நான் அனாதை விடுதியில் இருந்து கொண்டுவந்த குழந்தைதானே! எனக்கு ஏன் நீங்க செலவு செய்யணும்?

இந்த உணர்வு உன்னிடம் வரக்கூடாதுன்னு வளர்க்கிறோம்.

 நீங்க எல்லோரும் என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க!

அப்ப ஏதோ ஊரார் உங்களைப் பெருமையா பேசணும்னுதான் கேட்டு வாங்குவேன்.

எதிர்வீட்டு ஆன்ட்டி பாட்டி இல்லாத நேரத்துல என்கிட்டே வந்து நீ தத்துக் குழந்தைன்னு உனக்குத் தெரியுமா? உங்கம்மாவுக்கு இனி குழந்தை பிறந்தா என்ன ஆகுமோ? என்றெல்லாம் கூறுவார். நீ அனாதைன்னுதான்டா உங்கப்பா உனக்கு எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்வார். அதனால் உங்களுக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னுதான் பார்த்தேன். ஆனால், கடவுள் இப்படி சில பிரச்னைகளைக் காட்டுகிறார்.

அனாதைகளே உருவாகக்கூடாதுன்னா அதுக்கு என்ன செய்யணும் பாட்டி.

எல்லாம் பழைய சட்டங்களைத் தூக்கிப் போட்டு புது சட்டம் உருவாக்கணும்தான்…ஆனா அதுக்கு கடவுள்துணை வேணும்..நல்லா சாமியைக் கும்பிட்டுக்கோ……

 உங்க டீச்சர் நல்ல டீச்சர்டா!


Rate this content
Log in