பள்ளி
பள்ளி


அம்மா! பள்ளியில் ஃபீஸ் கேட்டாங்க
இருடா!பூ வியாபாரம் இன்னைக்கு மழை பெய்ஞ்சதால சரி இல்லை!
நீ என்னவோ உழைச்சு பெரிய ஸ்கூலில் சேர்க்கிறதா நினைச்சுக்கிட்டு இந்த ஸ்கூலில் சேர்த்துட்ட! பள்ளியில் ஆசிரியரே வர்றது இல்லேம்மா!
சின்ன கிளாசில் இருந்து இதே ஸ்கூல்ல தானேடா படிக்குற. ....
ஒரு நல்ல மிஸ் வந்தாங்கம்மா....அவங்க பாடம் எல்லாம் அடிப்படையில் இருந்து சொல்லித்தந்தாங்க.. எல்லாஆசிரியர்களும் அந்தமாதிரி இருப்பாங்களா....
ஃபீஸ் நல்லாத் தானே வாங்குகிறார்.
அம்மா.....ஆசிரியர்கள் பத்தாயிரம் என்றாலே கம்மி என வரமாட்டேன் என்கிறார்கள்.பேசாமல் கவர்மெண்ட் பள்ளிக்கே போயிடறேன்...
அங்கே அசிங்கமா பேசுவாங்க. ....
நான் யார் கூட பேசாமல் பாடத்தைமட்டும் கவனிச்சிக்கிறேன்.எப்பவும் தோல்வியடைஞ்சுக்கிட்டே இருக்கமுடியாது.பீஸைக்கட்டி மூணாவது தடவை தான் பாஸ் செய்தேன்.இவருக்கு ஃபீஸ் கொடுத்து படிச்சு நான் ஏன் ஃபெயிலாகணும்!
.. பார்த்து போம்மா! மெட்ரோ டிரெயின் போடுறேன்னு வழுக்கறமாதிரி தரையை பகட்டா போட்டு வைச்சிருக்காங்க மழை வேற விடாமல் பெய்யுது!
பழம்,காய்கறிகள் வாங்கிச்சாப்பிடும்மா....நீயும் அந்த கக்கூஸ் பக்கத்துல உன்பூக்கடையை எடுத்து கோவில் பக்கத்துல. .. இல்லைன்னா மார்க்கெட் பக்கத்துல போடுங்கள். ..தோல்வியடைஞ்சுக்கிட்டே வருதுன்னா இதுதானே காரணம்..இல்லையாம்மா.
மகனை அர்த்தத்துடன் பார்த்தாள் முத்துலட்சமி.