Arul Prakash

Others

4.5  

Arul Prakash

Others

பிச்சைக்காரனும் காதலும்

பிச்சைக்காரனும் காதலும்

9 mins
968


ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன், ஒரு ஊர்ல ஒரு ராஜானு தான கதை சொல்லுவாங்க, ஏன்னா இது ஒரு பிச்சைக்காரன பத்தின கதை. ஒரு பிச்சைக்காரன், ஒருநாள் ஒருத்தன் கிட்ட சரக்கு (மது )வாங்கி குடிக்கிறான், அன்னையில் இருந்து அவன் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் ஏற்படுது. அது நல்ல மாற்றமா இல்ல கெட்ட மாற்றமானு பாப்போம்.


அந்த பிச்சைக்காரன் எப்பவும் ஒரு மரத்தடியில தான் பிச்சை எடுப்பான், அங்க தான் தூங்குவான். ஒரு நாள் ஒருத்தன் சரக்கு வாங்கிட்டு நேரா அந்த மரத்தடியில உட்கார்ந்து ஒரு கிளாஸ்ல சரக்க ஊத்துறான்.



பிச்சைக்காரன் to அந்த ஆள் : யோவ் என்னயா இங்க உட்கார்ந்து சரக்கு அடிச்சிட்டு.



அந்த ஆள் : சாரிங்க இங்க உட்கார்ந்து சரக்கு அடிக்கறது உங்களக்கு பிடிக்கலையா.



பிச்சைக்காரன் : பிடிக்கலைனு இல்ல.



அந்த ஆள் : அப்பறம்.



பிச்சைக்காரன் : எனக்கும் கொஞ்சம் ஊத்தி கொடுத்தா, புடிக்கும்.



அந்த ஆள் பக்கத்துல இருந்த அவனோட கார் டிரைவர் கிட்ட, இன்னொரு கிளாஸ் வாங்கி, அந்த பிச்சைக்காரனுக்கும் சரக்கு ஊத்துறான். மூணு ரவுண்டு குடிச்சி முடிக்குறாங்க ரெண்டு பேரும்.



பிச்சைக்காரன் : if u don't mind, can you buy me dinner.



அந்த ஆள் : யோவ் போதையில இங்கிலிஷ்ல தப்பு தப்பா உலருறியா, இல்ல, எனக்கு இங்கிலிஷ் தெரியாதுனு கண்டுபுடிச்சிட்டியா.



பிச்சைக்காரன் : இல்ல சார், போகும் போது நைட் எதுனா சாப்புட வாங்கி தந்துட்டு போங்கனு சொன்ன.



அந்த ஆள் : கண்டிப்பா வாங்கி தரேன்யா, நீ எப்படி இங்கிலிஷ் பேசுற.



பிச்சைக்காரன் : நான் காலேஜ் செகண்ட் இயர் வரைக்கும் படிச்சி இருக்கேன்.



அந்த ஆள் : யோவ் எனக்கு போதையே தெளிஞ்சிடிச்சி, என்னயா படிச்சவனா நீ.



பிச்சைக்காரன் : காலேஜ் ட்ராப் அவுட் சார்.



அந்த ஆள் : யோவ் நான்லாம் ஸ்கூலே தாண்டல. நீ ஏன் இப்படி பிச்சை எடுக்குற. உன் கதை தான் என்ன.



பிச்சைக்காரன் : 22 வருஷமா நான் சினிமால வேலை செஞ்சேன்.



அந்த ஆள் : ஓ என்னவா இருந்த.



பிச்சைக்காரன் : அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தேன், டைரக்டர் ஆக முயற்சி செய்தேன்.



அந்த ஆள் : அப்பறம் ஏன் டைரக்டர் ஆகல.



பிச்சைக்காரன் : நாலு படம் பூஜ போட்டு நின்னுடிச்சி. ஒரு producer படத்துக்கு பூஜை போட்ட உடனே health issues ல இறந்துட்டாரு. ஒரு producerkku accident ஆகிடிச்சு. அதுனால ராசி இல்லாதவன்னு சொல்லி ஒருத்தரும் டைரக்டர் ஆக வாய்ப்பு தரல. 



அந்த ஆள் : நீ உண்மைய தான் சொல்லுறியா, நீ சினிமாக்காரனா.



பிச்சைக்காரன் அவன் பையில இருந்த ஒரு ஸ்மார்ட் போன எடுத்து, அதுல இருந்த போட்டோஸ் காமிச்சான், அதுல ரஜினி, கமல், விஜய் போல பல ஸ்டார் கூட போட்டோ எடுத்து இருந்தான். 



அந்த ஆள் : யோவ் ரஜினி கூட நிக்குறது நீயா.



பிச்சைக்காரன் : ஆமா.இது மூணு வருஷம் முன்னாடி எடுத்தது 



அந்த ஆள் : நீயே ஹீரோ மாதிரி தான் இருக்க.



பிச்சைக்காரன் : நடிக்க வாய்ப்பு வந்தது, நான் தான் டைரக்டர் ஆகணும்னு கொழுப்பா வாய்ப்பை தவற விட்டேன்.


இப்ப பிச்சை எடுக்குறேன்.



அந்த ஆள் : டைரக்டர் ஆக இன்னும் முயற்சி பண்ணி இருக்கலாம்ல.



பிச்சைக்காரன் : பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு, ஒன்னும் சம்பாரிச்சு தரல. பொண்டாட்டியும் பிள்ளைகளும், நீ வேணாம் எங்களுக்குனு சொல்லி இனிமே வீட்டுக்கு வராதனு சொல்லிட்டாங்க. சினிமாலையும் வாய்ப்பு வரல.விரக்தியில வந்து இந்த மரத்தடியில உட்கார்ந்தேன், கிழிஞ்ச டிரஸ், தாடி, நீளமான தலை முடி பார்த்து பிச்சைக்காரன்னு நினைச்சி காசு போட்டாங்க. ரெண்டு வருஷமா பிச்சைக்காரனா தான் இருக்கேன்.



அந்த ஆள் : சரி விடுங்க, வருத்தப்படாதீங்க. ஆமா உங்க பேரு தான் என்ன.



பிச்சைக்காரன் : என் பேரு ரமேஷ். ரொம்ப நாள் கழிச்சு, ஒருத்தர் என் பெயரை கேட்டு இருக்காரு இன்னைக்கி.



அந்த ஆள் : இனி உங்கள ரமேஷ்னு தான் கூப்பிட போறேன்.



ரமேஷ் : நீங்க யாரு, உங்க பேரு என்னனு சொல்லவே இல்லையே.



அந்த ஆள் : என் பேரு பாபு. நான் என்ன பண்றேன்னு சொல்றேன். அதுக்கு முன்னாடி, உங்களுக்கு என்ன கிடைச்சா சந்தோசமா இருப்பிங்கனு சொல்லுங்க.



ரமேஷ் : பாபு சார், எனக்கு என் புள்ளைங்களுக்கு எதுமே பண்ணலைனு ஒரு வருத்தம் இருக்கு, ஒரு 10 லட்சம் இருந்தா, ரெண்டு பிள்ளைங்க படிப்பு செலவுக்கு கொடுத்துட்டு வந்துடுவேன்.



பாபு : நான் 10 லட்சம் தந்தா எனக்கு ஒரு உதவி பண்ணுவியா.



ரமேஷ் : என் உயிரே தரேன்.



பாபு : அந்த உதவி பண்ண, உன் உயிர் எனக்கு தேவைப்படாது, மத்தவங்களக்கு தேவைப்படலாம்.



ரமேஷ் : யாருக்கு என் உயிர் தேவைப்படும், நீங்க யாருனு முழுசா சொல்லுங்க.



பாபு : நான் இந்த ஊரு ex MLA பையன்.



சார்னு சொல்லிக்கிட்டு ரமேஷ் எழுந்து நிக்குறான்.



பாபு to ரமேஷ் : அட உட்காரு பா.



ரமேஷ் : உங்களுக்கு நான் என்ன பண்ணனும்.



பாபு : நீ, ஒரு இப்ப இருக்க MLAவ லவ் பண்ணனும்.



ரமேஷ் : நான் ஆம்பளைய லவ் பண்ற type இல்ல.



பாபு : யோவ் அது பொம்பள தான்யா.



ரமேஷ் : அப்ப கூட ஒரு பிச்சைக்காரன யார் லவ் பண்ணுவா.



பாபு : யோவ் நீ ரெண்டு வருஷமா தான் பிச்சைக்காரன், 22 வருஷமா சினிமாக்காரன். முடிய வெட்டி, ஷேவ் பண்ணா திரும்ப ஹீரோ மாதிரி ஆகிடுவயா.



ரமேஷ் : கண்டிப்பா ஒரு பிச்சைக்காரன் தான் அவங்கள லவ் பண்ணனும்னு ஏன் நினைக்கிறீங்க.



பாபு : அந்த MLAக்கு 50 வயசு ஆகுது ஏற்கனவே கல்யாணம் ஆனவன் அவளை விட்டுட்டு ஓடி போய்ட்டான் அது மட்டும் இல்ல , 8 வருஷத்துக்கு முன்னாடி அவளை விட 20 வயசு கம்மியான பையன லவ் பண்ணிட்டு இருந்தா, அதனால தான் அவளுக்கு போன electionல கம்மியான ஓட்டு வந்தது, ஆனாலும் ஒரு 150 ஓட்டுல தான் ஜெயிச்சா.



ரமேஷ் : அது என்ன,லவ் பண்ணதால ஓட்டு கம்மியாச்சா.



பாபு : ஆமா,இந்த ஊர்ல பொம்பளைங்க ஓட்டு தான் அதிகம். இந்த ஊரு பொம்பளைங்க நிறையவே ஒழுக்கத்த பாப்பாங்க அதனால தான் கடைசியா நடந்த electionல அவ்ளோ ஓட்டு கம்மியாச்சு.



ரமேஷ் : ஓ அப்போ MLA விட 20 வயசு கம்மியான பையன லவ் பண்ணதால ஓட்டு கம்மியாயிடிச்சு கடைசி electionல.



பாபு : ஆமா.



ரமேஷ் : ஒரு பிச்சைக்காரன் ஏன் அவங்கள லவ் பண்ணனும்னு நினைக்கிறீங்க.



பாபு : அந்த MLAக்கு ஏற்கனவே ஒரு ஒழுக்கம் இல்லாதவனு ஒரு கெட்ட பெயர் இருக்கு, இப்ப மூணாவதா உன்ன லவ் பண்ணா, அவளுக்கு இன்னும் கெட்ட பேரு ஆகும், அதுவும் ஒரு பிச்சைக்காரன லவ் பண்ணா ரொம்ப கெட்ட பெயர் ஆகும். அவளுக்கு ஓட்டு போகும், எங்களுக்கு ஓட்டு வரும் நாங்க ஜெயிப்போம்.



ரமேஷ் : எல்லாம் சரி, அவ எப்படி ஒரு பிச்சைக்காரன லவ் பண்ணுவா.



பாபு : யோவ் நீயே உன்ன பிச்சைக்காரன்னு நம்புறியா, நீ 2 வருஷமா தான் பிச்சைக்காரன், 20 வருஷமா சினிமாக்காரன். அது மட்டும் இல்ல, நீ மூணு வருஷம் முன்னாடி எடுத்த போட்டோல ஹீரோ மாதிரி தான் இருக்க. நல்லா இங்கிலிஷ் பேசுற. அப்பறம் என்ன உனக்கு குறை. முடி தாடிலாம் கட் பண்ணி உன்ன திரும்பவும் ஹீரோ மாதிரி ஆகிடுறேன்.



ரமேஷ் : இது எங்க போய் முடிய போகுதோ, சரி அவங்க லவ் பண்ற moodல இருக்கணுமே.



பாபு : அதெல்லாம் அந்த moodல தான் இருக்கலாம், என்னோட ஆள் ஒருத்தி தான் அந்த MLA வோட P.A. அவ P.A மட்டும் இல்ல அந்த MLAக்கு , ஒரு தோழியும் கூட. அவ கிட்ட MLA சொல்லி இருக்காங்க, அவளுக்கு இப்ப ஒரு பார்ட்னர் தேவ படுதுனு 



ரமேஷ் : உங்க ஆள் தான் MLA P.Aவ. பயங்கரமான ஆளுங்க நீங்க.



பாபு : அந்த P.A உனக்கு எதுனா உதவி வேணும்னா செய்வா.



ரமேஷ் : ஆமா இந்த பிச்சைக்காரன வச்சி MLAவ லவ் பண்ண வைக்கலாம்னு ஐடியா எப்ப தோணிச்சு.



பாபு : உன்கிட்ட பேசும் போது தான் தோணிச்சு.



ரமேஷ் : சரி நான் எப்படி அந்த MLAவ சந்திப்பேன்.



பாபு : அது 2 நாள்ல உனக்கு சொல்றேன்.



ரமேஷ் : சார் அட்வான்ஸா பாதி பணம் தந்திங்கனா, போய் என் பசங்களக்கு படிப்பு செலவுக்கு கொடுத்துட்டு வந்துடுவேன்.



பாபு : சரி தரேன், நீ ஊருக்கு போகும்போது, என் ஆளு ஒருத்தன் உன் கூட வருவான், காச எடுத்துட்டு ஓடிட்டனா.



ரமேஷ் : சரி. வேலைய முடிக்காம பாதில ஓடிட்டனா, என்ன பண்ணுவீங்க.



பாபு : யோவ் நாங்க அரசியல்வாதிங்கயா அதெல்லாம் நீ எங்கயும் தப்பிக்க முடியாது, உன்ன ஒரு ஆளு follow பண்ணிட்டே இருப்பாங்க.



ரமேஷ் : ஒரு வேல என்னால MLAவ லவ் பண்ண வைக்க முடியலைன்னா.



பாபு : முயற்சி பண்ணி முடியலனா பருவா இல்ல. ஆனா உன்னால முடியும்.



ரமேஷ் : முடியலைன்னா அட்வான்ஸ் திருப்பி கேட்க மாட்டேங்களே.



பாபு : கேட்கமாட்டேன் அதுக்கு பதிலா, எனக்கு நாலு அஞ்சு பிஸ்னஸ் இருக்கு, நீ அதுக்கு விளம்பர படம் பண்ணி கொடுத்து சமன் செஞ்சிட்டு போ.



ரமேஷ் : சரி சார், ஊருக்கு போய்ட்டு ரெண்டு நாள்ல பாக்கலாம்.



பாபு : சரி, ஊருக்கு போகும் போது, நல்ல துணியா போட்டுட்டு போ. முடி வெட்டிடாத, ஷேவ் பண்ணிடாத, அது வச்சி ஒரு விஷயம் இருக்கு.



ரமேஷ் : சரி சார்.



--------------------------2 நாள் கழிச்சு ------------------------


பாபு, ரமேஷ பிச்சைக்காரனா வச்சி ஒரு டிவி ஷோ ல இருந்து பேட்டி எடுக்கற மாதிரி எடுத்து வச்சிக்கிறான், ரமேஷ், MLAவ லவ் பண்ண உடனே, ஊர் மக்களுக்கு, இந்த வீடியோ அவனோட சொந்த சேனல்ல போட்டு விட்டுடுவான். ஊரு மக்களுக்கு ரமேஷ் ஒரு பிச்சைக்காரன்னு தெரிஞ்சுடும்.


-------------அடுத்த நாள் -----------


அடுத்த நாள் MLAவ பாக்க போறான். பிளான் என்னனா MLAக்கு ஒரு டைரக்டர் வேணும், அவங்க கட்சி பத்தி ஒரு ப்ரோமோ வீடியோ பண்ண, எலெக்ஷன்காக, அதுக்கு ரமேஷ் போய் இருக்கான் . ஒரு ஜாதிக்காரங்க பத்தி MLA தப்பா பேசிட்டாங்கனு, MLA வீட்டு மேல கள் எரியுறாங்க சில பேரு, அந்த கல் ரமேஷ் தலைல விழுது. உடனே ரமேஷ ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போயிடுறாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு MLAவும் ரமேஷ பாக்க போறாங்க. போனவங்க ரமேஷ உடம்ப பாத்துக்க சொல்லிட்டு வெளிய கிளம்புறாங்க, அந்த ஜாதி மக்கள், MLA ஹாஸ்பிடல்ல இருக்கறத தெரிஞ்சுக்கிட்டு, திரும்பவும் வந்து கலாட்டா பன்றாங்க. அந்த கும்பலை கலைக்க அரை மணி நேரம் ஆகும்.MLA வேற வழி இல்லாம ரமேஷ் கூட உட்கார்ந்து இருக்காங்க, அவன் கிட்ட MLA பேச ஆராமிக்கறாங்க.


MLA : உங்க முழு நேர வேலைய AD பிலிம் எடுக்கறது தானா.


ரமேஷ் : இப்போதைக்கு தான், எனக்கு சினிமா படம் எடுக்கணும்னு தான் ஆசை.


MLA : ஓ எப்படி இந்த கதைலாம் எழுதுவீங்க


ரமேஷ் : சில நேரம் கற்பனை கதை, சில நேரம் வாழ்க்கைல இருந்து எடுத்து கற்பனை கலந்து எழுதுவோம்.


MLA: ஓ நைஸ்.


ரமேஷ் : ஒரு MLA வோட காதல் கதையை பத்தி ஒரு கதை எழுதிட்டு இருக்கேன், உங்க கதைய சொன்னா நல்லா இருக்கும்.


MLA : என் கிட்ட யாரும் இப்படி கேட்டது இல்ல.


ரமேஷ் : எதுக்குமே ஒரு ஆரம்பம் வேணும்ல மேடம்.


MLA : யாருக்கும் அவ்ளோ தைரியம் இல்லனு சொல்ல வந்தேன்.


ரமேஷ் : ஐயோ சாரி மேடம்.


MLA : பருவா இல்ல. நீங்க உங்க லவ் ஸ்டோரி ah சொல்லுங்க கேட்போம்.


ரமேஷ் : என்ன யாரு மேடம் லவ் பண்ண போறா.


MLA : இப்பவே நீங்க நல்லா தான இருக்கீங்க, இன்னும் சின்ன வயசுல ரொம்பவே நல்லா இருந்து இருக்க வாய்ப்பு இருக்கு.


ரமேஷ் : அதெல்லாம் இல்ல மேடம், ஒரு arranged marraige பண்ணேன் , இப்போ மனைவியை விட்டுட்டு தனியா இருக்கேன், சண்டையால.


MLA : ஓ ஓகே. எத பத்தி நீங்க கதை எழுதிட்டு இருக்கிங்க 


ரமேஷ் : ஒரு MLA க்கு 50 வயசுல லவ்.


MLA : நைஸ், இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களா.


ரமேஷ் : எஸ், ஏன் 50 வயசுல காதல் வராதா.


MLA : அதான.எனக்கும் 50 வயசு தான் இன்னும் ரெண்டு லவ் பண்ணுவேன்.


ரமேஷ் : thats the spirit, ஆமா உங்களுக்கு வயசு அம்பதா.


MLA : எஸ்.


ரமேஷ் : நம்பவே முடியல. 40 தான் இருக்கும் நினைச்சேன்.


MLA : என்ன MLA கிட்டவே கடல போடுறிங்களா.


ரமேஷ் : மேடம் நான் சொல்றத நீங்க நம்பளனு நினைக்கிறன், நீங்க வேணா பாருங்க என் அசிஸ்டன்ட் ஒருத்தன் இப்ப வருவான், அவன் உங்கள விடற லுக்க மட்டும் பாருங்க. நீங்க MLA னு அவனக்கு தெரியாது.


அதே மாதிரி அவனோட அசிஸ்டன்ட் வந்து MLA வ லுக் விடுறான்.


ரமேஷ் : நான் சொன்னல மேடம்.


MLA : அதுக்குனு 40 வயசுனு சொல்றது சொல்றது எல்லாம் அதிகமா தெரியுதுபா.


ரமேஷ் : இப்ப என்னோட இன்னொரு அசிஸ்டன்ட் வருவான்.


MLA : யப்பா போதும் பா, நான் நம்புறேன். நான் பாக்க எங் ah இருக்கனோ இல்லையோ, உன் அசிஸ்டன்ட்லாம் திருட்டு பசங்க போல.


ரமேஷ் : நீங்க MLA னு தெரிஞ்சா பாக்க மாட்டானுங்க மேடம்.


MLA : அதே தான் என் பிரச்னை, MLA னு சொல்லியே என்ன ஒதுக்கிடுவாங்க. ஒரு நம்பிக்கையான friend கூட இல்ல, எதுனா மனச தொறந்து பேச


ரமேஷ் : என்ன உங்க friend ah நினைச்சுகொங்க.


MLA யோசிக்கிறாங்க.


ரமேஷ் : என்ன யோசிக்கிறீங்க.


MLA : ஓகே நீங்க என் friend ah இருக்கலாம்.


ரமேஷ் : தேங்க்ஸ் மேடம்.


எலெக்ஷன்ல MLA கட்சி ப்ரோமோ ஷூட் பண்றதுக்காக ஷூட்டிங் நடக்குது, 5 மணி நேரமா ஷூட்டிங் நடந்தது, இப்போ கேமரா மேன்னுக்கு வயிறு சரி இல்லனு ஒரு பிரேக் எடுக்குறாங்க. பிரேக்ல ரமேஷ் MLAவ பாத்துட்டே இருக்கான்.


MLA to ரமேஷ் : என்னயா, என்ன அப்படி பாத்துட்டு இருக்க, என்ன சைட் அடிக்கிறியா.


ரமேஷ் : இல்ல மேடம் யோசிச்சிட்டு இருந்தேன்.


MLA : என்ன யோசனை.


ரமேஷ் : ஒரு கதைய பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.


MLA : ஓ நான் கூட என்ன தான் பாத்துட்டு இறுக்கியோனு நினைச்சேன்.


ரமேஷ் : உங்கள போய் பாக்க முடியுமா.


MLA : என்ன MLA னு எல்லாரும் போல மரியாதை கொடுத்தே தள்ளி வைக்கிறியா.


ரமேஷ் : இல்ல மேடம், சாரி அப்படி சொல்ல வரல.


MLA : என்ன friend மாதிரி ட்ரீட் பண்ணு, எனக்கு மனசு விட்டு பேச ஒரு ஆளு வேணும்.


ரமேஷ் : கண்டிப்பா மேடம். நாளைக்கு என்னோட பர்த்டே, நீங்க என்னோட வரிங்களா, ட்ரீட் என்னது.


MLA : ஒரு மூணு மணி நேரம் உனக்காக ஒதுக்குறேன்.


ரமேஷ் : தேங்க்ஸ் மேடம்


--------------------- அடுத்த நாள் ------------


MLA : ஹாப்பி பர்த்டே.


ரமேஷ் : தேங்க்ஸ் மேடம்.


MLA : என் கிப்ட் இதாங்க.


ரமேஷ் : தேங்க்ஸ் மேடம்.நீங்க எப்பவுமே தனியா இருக்கேன் பேச ஆளு இல்லைனு சொல்றிங்கல, இப்ப என் கிட்ட பேசுங்க உங்களுக்கு என்ன பேசணுமோ.


MLA : உடனே எனக்கு எதும் தோணல.


ரமேஷ் : சரி உங்களோட ஆசைய பத்தி சொல்லுங்க.


MLA : எனக்கு சத் குரு (சாமியார்)கிட்ட பேசணும்னு ஆசை.


ரமேஷ் : அப்பறம்.


MLA : எனக்கு நிறைய சின்ன குழந்தைங்க கூட பேசணும்.


ரமேஷ் : ரெண்டு ஆசையும் இன்னைக்கே நிறையவெத்திடலாம்.


MLA : ஹே சத் குரு பாக்கறது கஷ்டம் பா.


ரமேஷ் : 3 வருஷம் முன்னாடி அவர் கூட எனக்கு பழக்கம் இருக்கு, முயற்சி பண்ண பாத்துடலாம்.


MLA : அவர பாக்க முடியும்னா, இணைக்கு full ah உன் கூட டைம் spend பண்றேன்.


ரமேஷ் : ஓகே.


ரமேஷ் அவங்களோட ரெண்டு ஆசையும் நிறைவேத்ததிடுறான்.


MLA : இது என் வாழ்க்கையில ஒரு சிறந்த நாள்.


ரமேஷ் : எனக்கும் சந்தோஷம், உங்கள சந்தோஷமா பாக்குறது.


MLA : அது மட்டும் இல்ல, உன் கூட டைம் spend பண்ணது ரொம்பவே பிடிச்சி இருக்கு.


ரமேஷ் : தட்ஸ் மை pleasure.


MLA : அது மட்டும் இல்ல, இந்த நாட்கள் தொடரணும்னு ஆசை படுறேன்.


ரமேஷ் : கண்டிப்பா மேடம், நம்ம ஒரு நல்ல பிரிஎண்ட்ஸா இருப்போம்.


MLA : யோவ் நான் சொல்றது புரியுதா, நான் உன் கூட வாழணும்னு ஆசை படுறேன்.


ரமேஷ் : ஓ எனக்கும் உங்கள புடிச்சிருக்கு, ஆனாலும் நாளைக்கு சொல்லட்டுமா.


MLA : கண்டிப்பா.


அப்பறம் ரெண்டு பேரும் லவ் பண்ண ஆராமிச்சுடுறாங்க. ரமேஷ்க்கும் ஒரு படம் டைரக்ட் பண்ண வாய்ப்பு கிடைச்சுடுது. படம் பண்ணிக்கிட்டே, லவ் பன்றாரு. ஊர் full ah அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடிது. இந்த வயசுலயும் லவ் பண்ரா பாரு, இவளுக்கு வோட் போடக்கூடாதுனு அந்த ஊரு பொம்பளைங்க எல்லாம் முடிவு எடுத்துடுறாங்க.


எலெக்ஷன் கிட்ட வந்துடுது, மூணு நாள் தான் இருக்கு. ரமேஷ் எடுத்த படமும் ரிலீஸ் ஆகிடுது. இப்ப பாத்து கரெக்டா எதிர் கட்சி MLA பையன் பாபு, ரமேஷ் ஒரு பிச்சைக்காரன்னு ஒரு வீடியோவ வெளியிட்டுடுறான். ஊரு பொம்பளைங்க கிட்ட இன்னும் எதிர்ப்பு, ஒரு பிச்சைகாரண கூட இவ விட்ட வைக்க மாற்றான்னு. MLA, ரமேஷ் ஒரு பிச்சைக்காரன்னு தெரிஞ்ச அப்பறம் மனசு ஓடைஞ்சிடுறாங்க.


எதிர் கட்சி MLA பையன் பாபு, ரமேஷ உயிரோட விட்ட நம்மள போட்டு தந்துடுவான், ரமேஷ கொலை பண்ண ஆள் அனுப்பிடுறான். ஆளும் கட்சி MLA, ரமேஷ் லவ் பண்ணி ஏமாத்துனதுகாக, அவன கொள்ள ஆள் அனுப்பிடுறான். ரமேஷ் தலை மறைவு ஆகிடுறான்.



கொஞ்ச நாள் கழிச்சு, எலெக்ஷன் ரிசல்ட் வருது. ஆச்சர்யமா ரமேஷ் லவ் பண்ண லேடி MLA ஜெயிச்சுடுறாங்க. எதிர் கட்சி MLA எப்படி இப்படி நடந்தது விசாரிச்சா, அப்போ தான் தெரிஞ்சுது, ரமேஷ் எடுத்த படம் தான் அதுக்கு காரணம், அதுல பெண்கள் எந்த வயசுலயும் லவ் பண்ணலாம்னு ஒரு மேட்டர் வச்சி படம் எடுத்து இருப்பான், அந்த மேட்டர் அந்த ஊரு பொம்பளைங்க கிட்ட போய் சேர்ந்துடிச்சு, அவங்க அந்த லேடி MLAக்கு வோட் போட்டு ஜெயிக்க வச்சிட்டாங்க.


ரொம்ப நாள் தலை மறைவா இருந்த ரமேஷ் போன ஆன் பன்றான், பண்ண உடனே MLA கால் பண்ணி ரமேஷ பாக்க வர சொல்ராங்க. ரமேஷ் போய் பாக்குறான் 


MLA to ரமேஷ் : ஏன் இப்படி பண்ண.


ரமேஷ் : பணம் தரேன் சொன்னாங்க.


MLA : ஒரு பிச்சைக்காரன லவ் பண்ணது எனக்கு எவளோ பெரிய அசிங்கம் தெரியுமா, ஆனா நான் உண்மையா லவ் பண்ணேன். உன்னால தான் நான் இந்த எலெக்ஷன்ல ஜெயிச்சன்னு ஊர்ல பேசிக்கறாங்க, அதுனால உன்ன உயிரோட விடுறேன், இனி என் கண்ணு முன்னாடி வராத.


ரமேஷ் : சாரி.


MLA அழ ஆராமிச்சுடுறாங்க.


ரமேஷ் அங்க இருந்து போயிடுறான்.


ரமேஷ்க்கு எதிர் கட்சி தோத்த MLA பையா பாபு கிட்ட இருந்து கால் வருது


பாபு to ரமேஷ் : உனக்கே தெரியாம அவளை ஜெயிக்க வச்சிட்ட, எங்க அப்பன் உன்ன போட்டுட தான் சொன்னான், எனக்கு தான் மனசு வரல. எங்கயாவது தப்பிச்சு போய், உன் குடும்பத்தோட வாழு.


ரமேஷ் : ரொம்ப நன்றி. உங்கள நான் மறக்க மாட்டேன்.


ரமேஷ் பெரிய டைரக்டர் ஆகிடுறான், அவன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட நல்லா வாழுறான்.



--------------------------The End --------------------

































 



Rate this content
Log in