பெண்கள் தினம்
பெண்கள் தினம்


ஹேப்பி வுமன்ஸ் டே என்றது கமல் ஆண் சிங்கம். இதெல்லாம் மனிதர்களுக்குத்தான். நமக்கு கிடையாது. புரிஞ்சுக்கோ! என்றது சுந்தரி பெண் சிங்கம். என்னை நீங்க மரியாதையா நடத்துனால் போதும். மனிதர்கள்மாதிரி குகையிலும்,காட்டு ஆபிசிலும் வேலை செஞ்சுட்டு வர்றேன். இதுல ஓநாய்தலைமுடி சிரியன் தொல்லை வேறு! நீ வேறு! இலஞ்சம் வாங்கிட்டு வேலையில் சேர்த்து விட்டியா! அதைக் காட்டியே மிரட்டி அவன் குகைக்கு வான்னு கூப்பிடறான். இரு! முயலா போலிசிடம் சொல்வோம். நீதான் காட்டுக்கு ராஜா. உன் வீட்டுக்கே இந்த கதியா?
அம்மா! என்று அழுதபடி சுந்தரி பெண்சிங்கத்தின் பெண்குழந்தை மினியா ஓடி வந்தாள். ஆணின் ஆதிக்கத்தைத் தவி்ர்க்க காட்டில் சட்ட அமைச்சர் கரடி அங்கிள் வேகமாக வந்து கொண்டிருந்தபோது அவர் பெண் இனியாவை கட்த்திட்டாங்களாம் என்றாள். காட்டுராஜா ஆண் சிங்கம் என்னசெய்வதென்று தெரியாமல் தாடியைத் தடவிக்கொண்டிந்தது.