நீர்வளம்
நீர்வளம்


தரையே! தரையே! ஏன் என்னை உறிஞ்சிக் கொண்டே இருக்கிறாய்? என நீர் கேட்டது.
சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. மன்னித்துக்கொள்! தாகம் அதிகமாக உள்ளது.
ஏன் இந்த வருடம் சூரியன் இப்படி தகிக்கிறான்?
நான் எப்போதும்போலத்தான் இருக்கிறேன். இந்த மனிதர்கள்தான் இயற்கையைப் பாழடிக்கிறார்கள்.
என்ன செய்தார்கள் சூரியனே!
முதலில் பெட்ரோல்,டீசல் போட்டு வண்டி ஓட்டினார்கள். பின்னர் வானத்தில் வண்டி ஓட்டினார்கள். என்னிலிருந்து மின்சாரம் எடுத்ததுபோக அணுஉலை வழியாகவும் மின்சாரம் எடுக்கிறார்கள். இப்படி புவியைப் பாழாக்கிவிட்டு மரங்கள் குடும்பத்தை வளர்க்காமல் அடுக்குமாடி குடியிருப்புகளாகக் கட்டினால் பின் நான் என்னுடைய கதிர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
இதற்கு முடிவுதான் என்ன?
ஒழுங்கா மரங்களை சாலையெங்கும் வளர்த்து குளிர்ந்த காற்று வீசினால் பூமி தப்பிக்கும். நீர்வளத்தைக் காப்பாற்றி மண்சரிவிலிருந்தும்,கடலழிவுகளில் இருந்தும் மனித
ர்களை நான் காப்பாற்றுவேன்.இல்லையென்றால் …………
இல்லையென்றால் என்ன நடக்கும் சூரிய பகவானே!
முன்னர் செவ்வாய் கிரகத்தில் நடந்ததுதான் நடக்கும்…
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என ஆராய்ச்சியார்கள் சொல்லியிருந்தார்களே!
ஆமாம்! செவ்வாய் கிரகத்திற்குப் போனதாக இலக்கிய வரலாறுகள்கூட உண்டு.
நீர்வளம் பாதுகாக்காமல் இப்போதுபோல அப்போதும் மக்கள் இருந்திருப்பார்கள்.
சரி! இப்ப புவியைக் காப்பாற்ற வழி என்ன?
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு தெருவில் இவ்வளவுதான் மக்கள் வசிக்கவேண்டும் என்ற அளவு வரவேண்டும். அதிக அளவு பூமியைத் தோண்டக்கூடாது என சட்டம் வர வேண்டுமு். கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் நாலு சின்ன செடிவகைகளாவது வைக்க சட்டம் வரணும்!
வருமா?
அது வரலைன்னா கடலண்ணாதான் மக்களைப் பார்க்க வருவார்னு போய்ச் சொல்லு தண்ணீரு!