நீங்கள் செல்ல விரும்பிய பாதை
நீங்கள் செல்ல விரும்பிய பாதை
ஒற்றையடிப்பாதை வழியாக வேகமாகச் சென்றால் தாத்தாவை விரைந்து பார்க்கலாம் என கவிதா விருவிருவென நடைபோட்டுக் கொண்டிருந்தாள். அருகே பச்சைக்கிளி மரத்தின்மேலிருந்து கவிதா! கவிதா! என அழைத்தது.
என்ன கிளி?
இந்த பாதை வழியே வந்திருக்கியே!
ஏன்? வரக்கூடாதா?
வரலாம். இது கரடுமுரடான பாதை.
எனக்கு இது சீக்கிரமாக வீட்டிற்குப் போகலாம்.
வழியில் ஒரு அரக்கன் இருப்பான்.
காலேஜ் முடிந்து வர கொஞ்சம் லேட்.
நீ நல்ல பெண். கடவுளைக் கும்பிடறதாலே நான் இப்ப உன்னிடம் பேச கடவுள் வரம் கொடுத்திருக்கார்.
கடவுளை நம்பித்தான் இந்தபாதையில் வந்தேன்.
இருந்தாலும் மனிதர்களில் இன்னமும் பெண்ணைக் கேவலமாகப் பார்க்கும் குணம் அதிகம்.
நான் சீக்கிரம் போகலைன்னா நிறைய வேலை நின்னுடு
ம்.
நேர்வழியில் செல்வதுதான் உனது வயதிற்குச் சரியானது.
எனக்கு கராத்தே தெரியும்.
அரக்கனுக்கு மந்திரம், மாயை எல்லாம் தெரியும். ஒரு அரக்கன் பத்து அரக்கனாக மாறி உன்னைத் தாக்க வருவான்.
கிளி! நான் ஒண்ணும் மடையன் இல்லை. இவ்வளவு படிச்சு வந்திருக்கேனே! நான் என்ன முட்டாளா? என் கையில் பார்த்தியா?
என்ன இது நாய்க்குட்டி?
நாய்க்குட்டி இல்லை இது.
மனிதர்களில் இயந்திர மனிதன் கேள்விப்பட்டிருப்பாய் என நினைக்கிறேன். அதுபோல பெண்கள் தற்காப்புக்காக நான் தயாரித்த இயந்திரநாய்.
இது பெயர் என்ன தெரியுமா?
பட்டர்.
வெண்ணெய் மாதிரி வழுக்கி எதிரிகளைத் தாக்கி அழிக்கும். கண்ணில் கெமிகலைத் தூவும்.
நீ ஏதோ சொல்றே!..இனியாவது பெண்கள் பாதுகாப்புக்கு விடிவுகாலம் வருதான்னு பார்ப்போம்.