முதியோருக்கு மதிப்பு தரணும்
முதியோருக்கு மதிப்பு தரணும்
சீக்கிரம் போப்பா! பள்ளிக்கு லேட்டாகுது!
இன்னாமா சென்னை ரோடு ஒரு மழைக்கே நாதியற்றுப்போய் கிடக்குது..இப்ப பாருங்க இந்த கோயம்பேடு பஸ்டேண்ட் உள்ளாற போற இடத்துல உள்ள ஒரு இடம் வரும் பாருங்க! அப்ப சீட்டிலிருந்து இலேசா எம்பி நின்னு உட்கார்ந்துடணும்…இல்லைன்னா உங்க முதுகெலும்பு அம்போதான்….
சொல்லி வாய் மூடவில்லை.பள்ளத்தில் ஏறி இறங்கியபடி பஸ்டேண்டிற்குள் வண்டி செல்ல படாத பாடுபட்டது.
இவ்ளோ பெரிய பஸ் ஸ்டேண்ட் வச்சு என்ன பிரயோஜனம்..அலுத்துக்கொண்டனர் பஸ் பிரயாணிகள்.
கமலா இடம் கிடைக்கவும் தன் பையனை அருகில் உள்ள சீட்டில உட்காரச் செய்தாள்.
ஐயோ! அம்மா! என அலறினான்.
என்னடா! என பதறினாள் கமலா.
சீட் முழுதும் தண்ணீர்மா..உட்காரவும் சில்லுங்குது….
ஒரு ஸ்டாப்பிங்தான்.இறங்கிடலாம்.
கந்தன் பஸ் இறக்கிவிட்டவுடன் தனது பள்ளிக்கு வேகமாகச் சென்றான்.
அம்மா! நீங்க ஃபீஸ் கட்டிட்டு போய்ட்டு வாங்க!
வகுப்பறைக்குள் கந்தன் லேட் என்பதால் பாடம் புாய்க்கொண்டிருந்ததால் மிஸ் கண்காட்டியவுடன் உள்ளே சென்று அமர்ந்தான்.
வகுப்பு முடிந்தது. இனி சொன்னதை எழுதி வாருங்கள் என தமிழ்மிஸ் வெளியேறியதும் மாணவர்கள் அடுத்த பீரியட் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
கதை சொல்லி வந்துட்டேன் என வரும்போதே மிஸ் கண்களாலே் சிரித்தபடி பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சரி! போன வாரம் சுஜித் ஆழ்குழாயில் விழுந்தது குறித்து ஒரு கதை சொல்ல சொன்னேனே! தயாரா?
எங்களுக்குக் கற்பனை போதவில்லை. நீங்களே சொல்லுங்கள் என வகுப்பறை கதைக்காகக் காத்திருந்தது.
சுஜித்மாதிரி ஒரு ச
ின்ன பையன் கிராமத்துல இருக்கிற குழாயில விழுந்துட்டானாம்..
அதனால அவன் ஃப்ரெண்ட் சித்தார்த் தேவதைகிட்டபோய் வணங்கி எப்படியாவது என் ஃப்ரெண்ட் பால்பாண்டியை வெளியே எடுத்துவர வேண்டும் எனக் கேட்டது.
அதற்கு தேவதை உள்ளங்கையில் 3 மணிகளை வைத்து உருட்டியபடி இந்த வெள்ளைமணி வளைந்து வரக்கூடியது. இந்த சிவப்பு மணி சிறியதாகக்கூடியது. இந்த பச்சைமணி அதிசய மனிதனாகி வானம் வரை செல்லலாம் எனக் கூறியது.
பின்னாடி பெஞ்சில் இருந்த கந்தன் அருகில் இருந்த இன்பநாதனிடம் மிஸ் இன்னைக்கு மணிமேகலை கதையை உல்டா பண்ணி சொல்றாங்கடா என்றான்.
அது யாருடா மணிமேகலை…?
இது தெரியாம ஏண்டா இருக்கே!
கோவலன்-மாதவி குழந்தைதான் மணிமேகலை.
பின்னாடி பெஞ்ச் என்ன சத்தம்? என மிஸ் அதட்டினார்.
மிஸ் பின்னாடி ஒரு அதிசயமனிதன் உங்க கதையை உல்டா என்கிறான் ..
யாரும் கதை சொல்ல மாட்டீங்க….சொன்னா கிண்டல் செய்றீங்களா,
மிஸ் இது மணிமேகலை கதை உல்டாதானே!
மிஸ் வாயே திறக்காமல் இருந்தார்.எல்லா கதையும் அப்படி இப்படித்தான்டா வரும். பெர்முடா முக்கோணத்தை வச்சு கதை சொல்லுன்னாலும் தயாரா இருக்கணும்.
சரி! கதைக்கு வருவோம்.
பால்பாண்டி வெளியிலே வந்துட்டானா!
ஹூம்..அப்புறம் வகுப்பறை உம் கொட்டியது.
ஏண்டா! அந்த பக்கம் போனே? அதட்டினான் சித்தார்த்.
உள்ளே அந்த பாட்டி தனது பர்சைப் போட்டாங்களாம். மேலே நின்னுச்சு..அதான் எடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா என்னையும் உள்ளே தள்ளிடுச்சு…..
முதியோருக்கு மதிப்பு தரணும்தானே!
இதுதான் இந்த கதை நீதி..புரிஞ்சுதா!...........வகுப்பு கைதட்டலால் அதிர்ந்தது