Gowthaman V

Others

4.0  

Gowthaman V

Others

மதம்

மதம்

4 mins
338


               ரமேஷ் தன் காதலி பர்வீனை கல்யாணம் செய்த கையோடு அவன் வீட்டு வாசலில் இறங்கினான். வெளியே துணி காய வைத்துக்கொண்டிருந்த அம்மா வண்டி சத்தம் கேட்டு திரும்பி பார்த்து அதிர்ந்து நின்றாள். " என்னங்க..." என்று அலறியவள் உள்ளே ஓடினாள்.

பர்வீனோ பயந்து போனாள். ரமேஷ் அவள் கையை இறுக பிடித்து "கவலைப்படாதே நான் இருக்கிறேன்" என்றான்.


                  உள்ளே போன ரமேஷின் அம்மா அப்பாவுடன் வெளியே வந்தாள். அப்பாவின் கண்களில் கோபக்கணல்கள். வெளியே வந்தவர் ரமேஷை அடிக்க பாய்ந்தார். அம்மா குறுக்கே வந்து தடுத்தார்.

                   கோபம் அடங்காதவராய்," என்ன காரியம் செய்திருக்கிறாய் நாயே!" என்று கத்தினார். " யார் இவள்? எந்த ஊர்? என்ன பேர்? கல்யாணம் பண்ணிட்டு இங்கு ஏன்டா வந்த? அப்படியே எங்காவது ஒழிஞ்சி போக வேண்டியதுதானே" என்று கண்களில் நீர் ததும்ப கத்தினார்.


                     ரமேஷ் உடனே அவரிடம் சென்று காலில் விழுந்தான். " அப்பா! என்னை மன்னிச்சுடுங்க! நான் செஞ்சது தப்புதான் ஆனா இந்த சூழ்நிலையில் எனக்கு வேற வழி இல்லை எங்களுக்கு" என்றவன், தொடர்ந்து பேசினான்," இவள் என்னுடன் வேலை பார்க்கும் பெண் பெயர் பர்வீன், முஸ்லீம். இவளும் நானும் காதலித்தோம் ஆனால் இதை தெரிந்த அவள் வீட்டினர் இவளுக்கு வேற ஆளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. உங்ககிட்ட சொல்லிட்டு உங்க சம்மதத்தோடு திருமணம் செய்யலாம்னு இருந்த எங்களுக்கு இத தவிர வேறு வழியில்லை அதான் கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றான்.


                          பர்வீனும் ரமேஷுடன் சேர்ந்து காலில் விழுந்து அழுதாள். இதைக்கண்டு மனம் இறங்காமல் திரும்பி நின்றார் அப்பா. அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர். ஆனால் இதையெல்லாம் அப்பா கண்டுக்கொள்ளாமல். இருவரையும் வெளியே போங்க இங்க இடம் இல்லை இது ஆச்சாரமான பிராமண குடும்பம் என்றார். "இங்கு போய் முஸ்லிம் பெண்ணா அபச்சாரம்! அபச்சாரம்! நீ இருப்பதை விட செத்து போயிருந்தால் கூட நிம்மதியாக இருந்திருக்கும்" என்று ஆவேசப்பட்டார்.

 

                           இதற்கிடையில் பர்வீனை தேடி அவள் வீட்டினர் நிறைய ஆட்களுடன் அங்கு வந்தனர். வந்தவர்கள் இருவரையும் அடிக்க பாய்ந்தனர் ரமேஷின் குடும்பத்தினரை சேர்த்து. அதற்குள் சில ஊரார் கூடி தடுத்துவிட்டனர். ஊரார் சிலரோ வேறு மதத்தினர் நம் மதத்தினரை அடிப்பதா என்று அவர்களை அடிக்க ஆயுதங்களுடன் பாய அவர்களையும் சில ஊரார் தடுத்தனர்.ஆனாலும் பர்வீனின் குடும்பத்தார் மதத்தின் கோட்பாட்டை மீறி இப்படி அசிங்கப்படுத்திவிட்டாய் நீ ஒரு மதத்துரோகி, நீ வாழ தகுதியற்றவள், உன்னை கொல்லாமல் விட மாட்டோம் இவனையும் இவன் குடும்பத்தாரையும் கூட என்று ஆவேசமாக கத்தினர்.


                           இரண்டு வீட்டினரும் தங்களை ஏற்காமல் சபிப்பது மட்டும் அல்லாமல் இது மதக்கலவரமாய் மாறிக்கொண்டு இருப்பதை கண்டு செய்வதறியாது கதறி அழுதனர்.

                           ஊரா சிலரோ பெண் வீட்டினரையும், அவர்களை அடிக்க பாய்ந்த தன் ஊரார்களையும் தடுத்துக்கொண்டிருந்தனர். விட்டால் இவர்களை அடித்தே கொன்றுவிடும் ஆவேசத்தில் இருந்தனர் பெண் வீட்டினர்.


                          இதை எல்லாம் ஒரு மரத்தடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அழுக்கான தோற்றம், கந்தல் ஆடைகள்,தலையில் முஸ்லிம் குல்லா, உடம்பில் ருத்திராட்சங்கள், கையில் சிலுவை செயின், பெரிய துணி மூட்டை, ஒட்டு போட்ட செருப்பு, கையில் கம்பு வைத்திருந்தார்.


                             அவர் இவர்களை நோக்கி," நிறுத்துங்கடா" என்று ஊரே அதிரும்படி கத்தினார். அந்த அதட்டல் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. எல்லோரும் சத்தம் வந்த இடத்தை நோக்கினர். அந்த பெரியவர் இவர்களை நோக்கி வந்தார். 


                         வந்தவர்," என்னங்கடா! சாதிங்கிறீங்க மதம்ங்கிறீங்க என்னடா என்ன? " என்று கேட்டார். அவர் பார்க்க அழுக்காக இருந்தாலும் இந்துவும் அல்லாமல் கிறித்துவனாகவும் அல்லாமல் முஸ்லிமாகவும் அல்லாமல் எல்லாம் கலந்த தேஜஸுடன் இருந்தார். ஆனால் அவர் பேசிய விதம் ஒரு வித தெய்வீக உணர்வை அங்கிருந்த அனைவரிடமும் ஏற்படுத்தியது. 


                          உடனே இருதரப்பினரும் நடந்ததை கூறினர். அதை கேட்டு ஊரே அதிரும்படி சிரித்தார் அவர். பின் சொன்னார்," இங்கு எவனும் தன் மதத்தின் படி நடக்கிறதில்லை ஆனால் மதத்தை வைத்து அடித்துக்கொண்டு சாகிறான்" என்றார். 


                            எல்லோரும் புரியாமல் விழிக்கவே அவரே தொடர்ந்தார்," எந்த மதம்டா இப்படி நடுரோட்டில் சண்டை போட சொல்லுது, எந்த மதம்டா சக மனிதனை அடிக்க சொல்லுது, எந்த மதம்டா காதலித்து திருமணம் செய்வது குற்றம் என்கிறது, எந்த மதம்டா கையில் ஆயுதம் ஏந்தி நிற்க சொல்கிறது, எந்த மதம்டா தகாத வார்த்தைகளை பேச சொல்கிறது, எந்த மதம்டா மதத்தின் பெயரால் அடிதடி செய்ய சொல்கிறது" என்று கேட்டார்.


                             இதை கேட்ட அனைவரும் திகைத்து கையில் வைத்திருந்த ஆயுதங்களை கீழே போட்டனர். 


                           அந்த பெரியவர் தொடர்ந்தார்," உங்கள் மதம் சொல்கிற அடிப்படை படியே நீங்கள் நடப்பதில்லை ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை மதத்துரோகி என்கிறீர்கள். உங்கள் மதங்கள் சொல்லும் அடிப்படைகள் எவனாவது பின்பற்றுகிறானா சொல்? முதலில் உங்கள் மதத்தின் அடிப்படை என்ன சொல்கிறதாவது தெரியுமா?" என்று கேட்க அனைவரும் கன்னத்தில் அறைந்தார் போல் அமைதியாக நின்றனர் ஊரார் உட்பட.


                           " மதத்தின் அடிப்படையையே பின்பற்றாத மக்கள் மதத்துரோகியா அவர்கள் மதத்துரோகியா" என்றார். மேலும்," இந்து, முஸ்லிம், கிறித்துவம் எந்த மதமாக இருக்கட்டும் முதலில் போதிப்பது அன்பை மட்டுமே சகோதரத்துவம் மட்டுமே. விலங்காக இருக்கட்டும் மக்களாக இருக்கட்டும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை அன்பை மட்டுமே மதங்கள் போதிக்கிறது. அன்பு இருந்தால் பொய், புரட்டு,கொலை, கொள்ளை, போர், இனவெறி, சாதிவெறி எதுவும் வராது. இங்கு எத்தனை பேர் அவனவன் மதத்தின் படி நடக்கிறீர்கள்? மதத்தின் அடிப்படையில் நடக்காத எவனும் மதத்துரோகியே. அவனுக்கு மதத்தில் இருக்க அருகதையே இல்லை. 


                          எந்த மதமும் மக்களை கூட்டி மதத்தை பரப்ப சொல்லவில்லை, அன்பையும் அறத்தையும் மட்டுமே போதிக்கிறது. எந்த மதமும் எவன் காலிலும் விழச்சொல்வதில்லை. எந்த மதமும் சக மக்களை வதைக்க சொல்வதில்லை. எந்த மதமும் மற்ற மதத்தை கீழாகவோ மேலாகவோ பேச சொல்லவில்லை. ஆனால் இன்று உலகத்தில் நடப்பது எல்லாமே ஒட்டுமொத்த மதங்களுக்கு எதிராகவே உள்ளது. உலகில் உள்ள எவனுமே மதத்தை பற்றி பேச அருகதையற்றவர்கள் அப்படி மதத்தின் பேரில் மக்களிடையே காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் அவனே மதத்தின் முதல் எதிரியாவான்.அவனை பின்பற்றும் அனைவருமே மதத்துரோகிகள். 


                           மதத்தின் பேரால் இன்று உலகம் மதத்துரோகிகளால் நிறைந்துள்ளது. இதுல வந்துடானுங்க! முதல்ல போய் மதங்கள் சொல்லுறத பின்பற்று அப்போ தான் நீ உண்மையான மதம் சார்ந்தவன். இப்படி கண்டதுக்கெல்லாம் அடிச்சுகிட்டா நீ ஒரு மதத்துரோகி. இறந்தப்பின் நரகம் போவாய்!" என்று கூறிவிட்டு அவர் தன் வழியில் " முட்டாள் மக்கள் மதமா மதம் மதத்தின் அடிப்படைகள் தெரியாத மாமிச உடல்கள் மதத்தை பற்றி பேச வந்துட்டாங்க. இவனுங்க மதத்தை காப்பாற்ற போறாங்களாம்! இப்படியே மதத்தின் பெயரால் களவாணித்தனம் பண்ணிட்டு மதத்துரோகம் செஞ்சிட்டு நாங்கள் மதத்தை காப்பத்தறவங்க என்று வாழ்ந்து சாவறவங்களுக்கு நரகம் தான் இறுதி" என்று சென்றவர் சாலையின் இறுதியில் ஒளிமயமாய் சென்று மறைந்தார்.


                          அனைவரும் இதை பார்த்து திடுக்கிட்டனர் .


                          அடுத்த நாள்,

மாமா! இந்தாங்க காபி என்று ரமேஷின் அப்பாவிற்கு காபி தந்தாள் பர்வீன். "பாருப்பா! மாமாவ வீட்டுக்கு வந்ததும் பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற குடும்பத்தையே மறந்துட்டா" என்று நக்கலடித்தார் பர்வீனின் சகோதரன். உடனே அனைவரின் சிரிப்பும் கலகலப்பாய் ஊரெங்கும் எதிரொலித்தது. ரமேஷ் அந்த பெரியவருக்கு மானசீகமாய் நன்றி சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டான்.

                      

   பூஜை அறையில் ராமர் இயேசு, நபிகள்,புத்தன் படங்கள் சுவற்றில் ஒன்றாக ஒளி வீசியது.

                          

                          



Rate this content
Log in