STORYMIRROR

Shakthi Shri K B

Children Stories Drama Fantasy

4  

Shakthi Shri K B

Children Stories Drama Fantasy

குளிரில் ஒரு நட்பு

குளிரில் ஒரு நட்பு

2 mins
412

கணேஷுக்கு தன் அம்மா, அப்பா , தங்கை, வீடு, பள்ளிக்கூடம், நண்பர்கள் இவை தான் உலகம். நாட்கள் மிக சிறப்பாக சென்றுகொண்டிருந்தது.

அன்பான குடும்பம், நட்பு, படிப்பு என சென்றுகொண்டிருந்தது. அன்று செப்டம்பர் 23 ஆம் நாள், 1995 ஆம் வருடம். கணேஷின் தந்தைக்கு பணி இடம் மற்றம் என தந்தி வந்த நாள். அதை அவளால் மறக்கவே முடியாத நாள். அம் அவன் தன் நண்பர்களை விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது.

அப்படி அவர்கள் சென்னையை விட்டு தில்லிக்கு சென்றனர். தில்லி, இந்தியாவின் தலைநகர். அது ஒரு அழகி ஊர், வெவ்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் ஊர். அங்கு குளிர்காலத்தில் அதிக குளிரும் வெயில் காலத்தில் அதிக வெயிலும் வாட்டியெடுக்கும். 

கணேஷின் குடும்பம் தில்லி வந்து இரண்டு மாதங்கள் ஆகின. இன்னும் கணேஷுக்கு நண்பர்கள் அமையவில்லை. புதிய ஊர் புதிய பள்ளிக்கூடம் என சற்று புதிய அனுபவங்களில் தவித்துவந்தான் கணேஷ்.

அன்று மிக கடுமையான குளிர் நாள் என்ன செய்வது என்று புரியாமல் கணேஷ் வீட்டில் அனைவரும் இருந்தனர். அவர்கள் வீட்டின் அருகில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அன்று மிக அதிமாக குளிர் என்பதால் கணேஷ் வீட்டில் என செய்வது என்று புரியாமல் இருப்பார்கள், அவர்களுக்கு நாம் உதவலாம் என எண்ணி இவர்கள் கணேஷ் வீட்டுக்கு சென்று, கவலை படாதிர்கள் இது உங்களுக்கு தில்லியில் முதல் குளிர் காலம் என்பதால் எப்படி தெரிகிறது, போக போக பழகிவிடும். வாருங்கள் இந்த சூப்பை அருந்துங்கள் என அந்த வீட்டின் பெண்மணி கூறினார்.

கணேஷின் அம்மா, உதவிக்கு நன்றி கூறி சூப்பை வாங்கி அனைவருக்கும் கொடுத்தார். மறுநாள் கணேஷ் இங்கே வா, போய் பக்கத்து வீட்டு அம்மாவிடம் இந்த பத்திரைத்தை கொடுத்துவிடுவா என்றார். அவர் தந்த சூப்பு பதிதரத்தில் எவர் சாம்பார் செய்து தந்திருந்தார்.

கணேஷும் கொண்டு போய் குடுத்தான். அப்போது அந்த வீட்டில் அவனுடன் படிக்கும் கிஷோரை கண்டான். இருவரும் புன்னைகையுடன் பேசினார் ஆங்கிலத்தில். அன்று முதல் என்றும் குளிர் காலத்தை ஒன்றாகவே கழித்துவருகின்றனர் கணேஷும் கிஷோரும். இந்த குளிர்கால நட்பு என்றும் குறையாமல் இருக்க அவர்கள் வருடம் முழுவதும் குளிர் காலத்திற்காக காத்து இருப்பார்கள்.



Rate this content
Log in