Madhu Vanthi

Children Stories Comedy Fantasy

4.5  

Madhu Vanthi

Children Stories Comedy Fantasy

கல்கி வீரா - 4

கல்கி வீரா - 4

4 mins
319


வீட்டிற்குள் நுழைந்த தேவயாசினியின் கண்களோ, அவள் புதல்வன் ஆறையையே ஒருவிதமான ஏக்க பார்வை கொண்டு வருடி வர... உடைந்த அனையாய், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.....

ஆனால் அவனோ தன் முழு பிடிவாதத்தை கொண்டு, விடாப்பிடியாக அந்த மர பெஞ்ச்சில் அமர்ந்து இருந்தான்....

இது, அவனை தெரியாத்தனமாய் கோவிலுக்கு அழைத்து செல்லும் ஒவ்வொரு முறையின் போதும், அவளுக்கு கிடைக்கும் வழக்கமான தண்டனையே.... எனினும் இன்றோ மற்றய நாள் போல் அல்லவே....,

அவன் கோபம் விடியும் வரை மட்டுமே......, அவன் கண் விழிக்க, அவனின் தாய் கண் முன் நிற்க வேண்டும்.... இல்லையெனில் அவனே கோபத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, தன் பாசத்தாயை அழைத்து விடுவான்.... ஆனால் நாளைய விடியலோ............,.........

தன் மகனை இறுதியாய் பார்த்துவிட மாட்டோமா என்று அவள் கண்கள் அழைபாய்ந்த வண்ணமே இருந்தது....

ரக்ஷவனின் மனம், எதோ சொல்ல முன்வந்தாலும், அவனின் மூளையோ.... , " உனக்கு பிடிக்காத விஷயத்தை செஞ்சதால நீ உன் அம்மா மேல கோபமா இருக்க..... நாளைக்கு காலைல வர பேசாதே.... என்று பலமாக மணியடித்து கூறியது..... இந்த மூளை அடித்த மணியோசையில், மனதின் குறலான, " இப்போ இல்லனா, இனி எப்பவுமே உன் வாழ்நாள்ல உன் பாச தாய பாக்கவே முடியாது.... உடனே போய் பாருடா.... முட்டாளே.... அவ உன் அம்மா...." என்ற ஓசை, அவனின் சேவியை எட்டவில்லை...

தேவயாசினியோ அறை மனதுடன் தன் அலுவலகத்துக்கு புறப்பட்டாள்... புறப்பட்டு வெளியே வந்தவளின் விழிகள்.., அவள் இத்தனை ஆண்டுகளாய் வாழ்ந்த வீட்டை தீண்ட.... அவள் பார்வையோ, அனிச்சையாய் அங்கு சுவரில் தொங்கிய அவழின் உயிரின் ஆதாரமான.... ரக்ஷவனின் குழந்தை பருவம் முதல் இரு வாரங்கள் முன் அவன் பள்ளி இறுதி நாள் விழாவில் எடுத்த புகைப்படம் வரை, ஒவ்வொன்றாக சுழன்று வந்தது..... இறுதியாய் மகனும் தாயும் சேர்ந்து இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து....., "அவன் இத கண்டிப்பா பாத்துருவான்...", என்று எண்ணியவாறே வேதனை நிரம்பிவழியும் விழிகளால் தீண்டி.... பிரியாவிடை பெற்றுக்கொண்டு.... அங்கிருந்த படிகட்டை நோக்கி தன் மெல்ல நடைகளை எடுத்து வைத்தாள்.....

ஜன்னல் வழியே.... , படிக்கட்டில் நடக்கும் தன் தாய்.... சாலையை பார்த்து சென்றாலும்... தன்னை திரும்பி பார்ப்பாள் என்பது தெரிந்த ரக்ஷவன்... நான் அவளை பார்க்க மாட்டேன் என்று வைராகியமாக கண்களை இறுக்க மூடிக்கொண்டிருந்தாலும், அவள் தன்னை பார்க்க அனுமதி அளித்திருந்தான்.....,

தனக்கு பிடிக்காத விஷயத்தை செய்து விட்டாளே.... அதனால் நான் பேச மாட்டேன் என்ற பிடிவாதமே அன்றி அவள் மீது கோபப்படும் அளவிற்கு அவன் மூர்கன் அல்ல.....

அவன் நினைத்தது போலவே, தேவயாசினி படியில் இறங்கிக்கொண்டே... தன் புதல்வனான, வருங்கால பூமியின் ரட்சகனை... இறுதி பார்வையில் வருடினாள்.... ஆனால் அவனோ.. கண்களை பசை போட்டு ஒட்டியதை போல் வீம்புக்காக மூடியிருந்தான்....

அவள் அறியாமலேயே இப்போது அவள் கண்களில் நீர் கோர்த்துகொண்டு இருந்து.... தன் மகன் தன்னை காண விருப்பமின்றி கண்களை மூடி இருப்பதை கண்டதுமே, மடை திறந்த அனை போல கண்ணீர் ஊற்றெடுத்து....

ஆனால் அவனோ இவை எதயும் கவனிக்காமல் கண்களை மூடியவாறு தன் தாயை வழியனுப்பி கொண்டிருந்தான்... என்னதான் கோபம் என்றாலும் , தாய்... தாய்தானே....., அவளை மனதினுள்ளேயே, "லவ் யூ தேவாம்மா.... பத்திரமா போய்ட்டுவா... டாட்டா....", என்று வழியனுப்பினான்.

          ****************

நேரம் 11 ஐத் தாண்டி கொண்டிருந்தது.... அலுவலகப் பணிகளை அவளால் சரிவர கவனிக்க முடியவில்லை...., "அவன அந்த கோவிலுக்கு இன்னைக்கே கூட்டிட்டு போய் ஆகணும்....., ஆனா அவனோட பிடிவாதம்....., கொஞ்சமும் குறையாதது..., இப்போ என்ன சொல்லி நான் உன்ன கோவிலுக்கு கூட்டிட்டு போக போறேன்னு தெரியலையே டா ரக்ஷவா... ", என்று அவள் மனம் நொந்து கொண்டிருந்த அதே வேளையில் அவளின் அலைபேசி ஒலித்தது..... அதில் ஒளிர்ந்த பெயரை கண்டவுடன் ஏதோ பாரம் குறைந்தவளாய் மெல்லிய புன்முறுவலை அழைத்து, தன் இதழில் பதித்துக் கொண்டாள்....

இரண்டு நிமிடங்கள் அலைப்பேசி உரை முடித்தபின், "இன்னைக்கு, நாலு மணிக்கே ஆபீஸ்ல இருந்து கிளம்பி ஆகணும்", என்று தீர்மானமாக முடிவு செய்தாள்.

வீட்டில்......

ரக்ஷவனுக்கு மனம் இப்போது சற்று அமைதி அடைந்து இருந்தது...,"இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல.... எப்ப பாத்தாலும் என்னய கோவிலுக்கு கூட்டிட்டு போறது...., அந்தக் கல்லை பாக்குறதுக்கு நான் ஏன் போகணும்?", என்று திட்டவட்டமாய் கூறியவாறு மெல்ல எழுந்து, தன் டிராயரில் இருந்து ஒரு சிறிய அளவிலான நோட்பேட் ஒன்றை எடுத்தான்.... அதன் முதல் பக்கத்தில் ,


   "மாற்றம் ஒன்றே மாறாதது..." ,


என்று சற்று தடித்த எழுத்துகளில் எழுதி இருந்தது..... புன்முறுவலுடன் அந்த  எழுத்துகளை மெல்ல வருடியவன்...., "நான் மாற போறதே இல்ல ...., இந்த அம்மா எப்ப தான் மாறுமோ", என்று நாளை முதல் தான் ஒரு புதிய மனிதனாக போகிறோம் என்பது அறியாமல், புன்னகை வீசிக்கொண்டே மறுபக்கத்தை திருப்பினான்....., அதில்


நீ தேடுவது ,

உனக்கு தேவை இல்லை என்றால்

அது உனக்கு

கிடைக்காது...


அதேபோல் பட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது...... "எது..? அந்த கனவுல வர "வாளா?", என்று.... தன் கனவில்..., பார்வைக்கு எட்டும் வாள் கைக்கு எட்டாததை நினைத்து சற்று சத்தமாகவே சிரித்தான்... மறுபுறம் திருப்ப அதிலும் இதுபோல் சில வார்த்தைகள்......, இப்படியே சில பக்கங்களை திருப்பிக் கொண்டே இருந்தான்... இறுதியாக , ஒரு பக்கத்தில் தன் காகிதம் திருப்பும் பயணத்தை நிறுத்தினான்....


அப்பக்கத்திலோ.....


    ஒவ்வொரு கதைக்கும்

          முடிவு உண்டு


             ஆனால்

 


         நிஜவாழ்வில்

             முடிவே

   புதியதொரு அத்தியாயத்தின்.

        தொடக்கப்புள்ளி....


என்றிருந்த அந்த வரிகளை கண்டதும் அவன் மனம் அவனுள் ஏதோ எடுத்துரைக்க நினைத்தது...... ஆனால் அவன் சற்றும் அதற்கு செவிமடுக்கவில்லை..... அந்த நோட் பேடை அப்படியே மூடி வைத்துவிட்டு மணி மணி மதியம் 12 நெருங்குவதை கண்டு, "பசிக்குது..... பசிக்குது......", என்று கிச்சனுக்கு ஓடினான்.....

அந்த நோட்பேட் காற்றில் மெல்ல திறந்து அவனைப் பார்த்த அதே இடத்தில் வந்து படபடத்துக் கொண்டிருந்தது....... அது அவனின் தந்தை உடையது என்று தேவயாசினி அவனிடம் கொடுத்தது.....

குழப்பத்தில் இருக்கும் போதோ... அல்லது மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் போதோ... இதைப் பார்த்தால், இதில் உள்ள வரிகள் நமக்கு பதில் சொல்லும் என்று அவனின் தந்தை தனக்கு தந்ததாகக் கூறி தன் புதல்வனுக்கு அதைக் கொடுத்தாள் தேவயாசினி...., அவனுக்கும் அந்த வரிகள் எப்பொழுதும் ஆறுதலையும் அவனின் குழப்பத்திற்கான விடையையும் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது...

மதிய உணவை உண்டு முடித்தவன், சற்று சோர்வாக இருந்ததால் தன் அறைக் கட்டிலில் அப்படியே அயர்ந்து உறங்கி விட்டான்......

மாலை சரியாக 4 மணி போல ரக்ஷவனின் அலைபேசி அலறியது.....

அதிலே உறக்கம் கலைந்து விழித்தவன், அதன் திரையை பார்க்க அதிலோ.... பாசத்தாய் 💝😘 என்றிருந்தது.....,

அதை கண்டவனோ, "அம்மா... உன் தண்டனை காலம் இன்னும் முடியல....", என்று குறும்பாக அந்த அழைப்பை துண்டிதான்.....

மறு முனையில்..... இது நா எதிர்பார்த்து தான்.... என்பது போல் அந்த துண்டிப்பை பார்த்து விட்டு...., தன் மனேஜரிடம் விடுப்பு கேட்க சென்றாள் தேவயாசினி..... மெனாஜரும், அவள் இதுவரை எதற்கும் விடுப்பு எடுத்ததில்லை என்பதாலும், அவள் மேல் இருந்த மிகுந்த நம்பிக்கயாலும் அவளுக்கு நான்கு மணி நேரம் முன்பே விடுப்பு தந்தார்.....அந்த நேரத்தில் பேருந்து வராது என்பதாலும் , ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வரும் மினி வெனில் ஏறி தன்னை தேடி வரும் விருந்தினரை காக்க வைக்காது அவர்களை சென்று அழைக்க வேண்டும் என்று விரைவாய் தன் இருப்பிடம் நோக்கி சென்றாள்....

❣️சாகச பயணங்கள் சலைக்க்காமல் வரும்❣️


Rate this content
Log in