Madhu Vanthi

Children Stories Comedy Fantasy

4  

Madhu Vanthi

Children Stories Comedy Fantasy

கல்கி வீரா - 3

கல்கி வீரா - 3

3 mins
360


ரக்ஷவனோ வீர நடை போட்டு தன் தாயைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான்..... ஆனால் தேவாயாசினியோ, பதட்டத்தின் உச்சகட்டத்தில் இருந்தாள்..., அவள் அவனுக்கு முன்னே சென்று கொண்டிருந்ததால் , அவனால் தன் தாயின் வாடியமுகத்தை காண இயலவில்லை.... மாறாக அவன் முழு ஆர்வத்தில் இருந்தான்... புதிய இடத்தை காண.


"அம்மா இன்னும் எவ்வளவு தூரம்.....?", என்று தன் பொறுமையை இழந்து அவன் கேட்க...

"கொஞ்சம் பொறுமையா இருங்க புதல்வரே.... அவ்வளவு ஆர்வமா? ", என தன் கண்ணில் கசிந்த நீரை அவன் அறியாமல் துடைத்து, பொய்யான சிரிப்பை முகத்தில் வைத்துக்கொண்டு அவனை நோக்கி திரும்பினாள்.


"ஆமாம்மா .... இந்த மலையில எனக்குத் தெரியாத இடம்னு நீ சொன்னதுல இருந்தே ரொம்ப ஆர்வமா இருக்கு .... நான் போகாத இடம் இருக்குங்கிறத இன்னும் என்னால் நம்ப முடியல", என்று கூறியது தான் தாமதம்.... கூறியவனின் காதை பிடித்து மெல்ல திருகினாள் தேவயாசினி...


"ஆஆ.....! ஏன்ம் மா..... வலிக்குது..... விடும்மா......", என்று அவன் நடு வீதி என்றும் பாராமல் கத்த..., "அப்போ நான் இல்லாத நேரத்துல ....., நீ ஊர் சுத்திட்டு இருந்துருக்க.... படிக்கல??? ", என்று முழுமையான போலி கோபத்தை அவள் முகத்தில் பதித்தாள்.


"அய்யய்யோ....... வாலன்டியரா போய் வம்புல மாட்டிகிட்டோமே...... சரி ..... நம்ம மழுப்புத்தன்மைய கொஞ்சம் யூஸ் பண்ணுவோம்...."என்று மைண்ட் வாய்ஸ் வாசித்து விட்டு..... " அப்டிலாம் இல்லம்மா...., நா படிச்சுட்டு தா போவேன்..... பிராமிஸ்.....", என்று உலகமகா அப்பாவியாக முகத்தை மாற்றினான் நம் வீரம்னா என்னன்னு கேக்குற வீராதி வீரனான ரக்ஷாவன்....


"என் அழகு புதல்வன பத்தி எனக்கு தெரியாது பாரு..... நம்பிடெண்டா நீ சொன்னத.....", தானும் அப்பாவிதான் என்பது போல் நக்கலாக பதிலளித்தார் அவனின் அன்புத்தாய்... 


"நம்பியாச்சுல ...... அது போதும்....", என்று தன்னை கலாய்க்கும் தன் தாயிடம் பல்லை காட்டிவிட்டு "அப்பாடா பிறந்தனாலுங்குரதாள தப்பிசோம் டா", என்று அவளுக்கு எதிர்ப்புறம் திரும்பி திருட்டு முழி முழித்தான் .


அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, சட்டென தன் மூளையை ஏதோ ஒன்று தட்டி எழுப்ப....தாங்கள் செல்லும் பாதை எந்த இடத்தை நோக்கி செல்லும் என்று யூகித்தவனுக்கு..... கண்கள் சிவக்க.... உடலில் உள்ள உதிரம் வேகம் ஏற.... இதுவரை தாயுடன் பேசி ,விளையாடி, புன்னகைத்த இதழ்கள் கடுகடுத்து போய் விறைப்பாய் இருகி இருக்க.... தன் தாயை நோக்கி தன் கோபப்பார்வை அம்புகளை சரமாரியாக எய்தான்.....


தேவயாசினியோ.... " ஆஹா.... புள்ள சுதாரிச்சுருசு.... இனி அவன் ஒரு அடி முன்னாடி வைக்க மாட்டான்.... இப்போ நான் ஏப்படி அங்க கூட்டிட்டு போவேன்??", என்றும் மைண்ட் வாய்ஸ் வாசித்த வாரு.... "ஏன்டா தம்பி..... ஏன் முறைக்கிற?, என்னாச்சு", என்று எதுவும் அறியாதவள் போல் வினவினாள்.


"இப்ப என்ன ஆச்சுனு உனக்கு தெரியாது? ", முறைத்த கண்கள் முறைத்தவாறே இருக்க.., குரலில் கோபம் தெல்லந் தெளிவாய் வெளிப்பட்டது.


"சொன்னா தானே பா தெரியும்", என்று அப்பாவியாய் பதிலளித்தாள் தேவயாசினி....


"நான் போகாத இடம்னு சொன்னப்பவே உஷாரா இருந்திருக்கணும்.... தப்பு பண்ணிட்டேன்..... நீ கூப்பிட்ட உடனே எங்க போறேன்னு கூட கேட்காம வந்தேன்ல .... என் தப்புதா.... என் தாப்புதா....." என்று பல்லைக் கடித்தவாறு , தாண்டவம் ஆடாத குறையாய், வானுக்கும் பூமிக்கும் குதித்தான்....


"என்னடா ஆச்சு உனக்கு?, சொன்னா தானே புரியும்.... இப்படி தலையும் புரியாமல் காலும் புரியாமல் தையத்தக்கனு குதிச்சா எனக்கு என்ன புரியும்? ", என்று தன் காரியம் நிறைவேறுவதற்கு.... எதுவும் தெரியாதவளாய் பாவித்து நின்றாள்.


"இப்போ நாம எங்க போறோம்னு நீ சொன்னா மட்டும் தான் நான் இந்த இடத்தைவிட்டு நகருவேன்.... இல்லனா ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்" , என்று அங்கேயே அமர போனவனை தேவயாசினி பிடித்து மேலே இழுத்து நிற்க வைத்தாள்.


"இப்போ என்ன...?, உனக்கு நாம எங்க போறோம்னு தெரியணும்.... அவ்வளவுதானே....", என்றவளின் கேள்விக்கு "ஆம்" என்பது போல இரு விழிகளையும் இமையால் மூடி தலையை மேல்கீழ் ஆட்டினான் ரக்ஷவன்.


"நீ நெனைக்கிற எடுத்துக்கு தான் போறோம்", இவ்வளவு நேரம் தன் ரகசியமாய் வைத்திருந்த இடத்தைப் பற்றிய உண்மையை சட்டென போட்டுடைதாள்....


தன் முகத்தில் உலகின் ஒட்டுமொத்த கோபத்தையும் ஒட்டி வைத்திருந்த ரக்ஷவன்..... தன் பாசத்தாயை நோக்கி ஒரு கோபப்பார்வை எறிந்து விட்டு.... வந்த வழியே திரும்பி நோக்காமல் வேக நடை போட்டு வீட்டை நோக்கி விரைந்தான்...


ஆனால் அவளோ, "இறைவா..... இவனா இந்த அண்டத்தோட ரட்சகன்?...., இப்படி கடவுள் மேல கொஞ்சமும் பக்தி இல்லாம இருக்கானே...., என் கடமையை என்னால முழுசா முடிக்க முடியாது போலவே...., இவன கோவிலுக்கு கூட்டிட்டு போற வரைக்கும் என் விதிய விட்டு வை இறைவா....", தன் நிலையை நினைத்து நொந்து கொண்டே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் தேவயாசினி. 


வீட்டின் கதவை படாரென்று திறந்தவன்.... தாய் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பமின்றி நேராக தன் அறைக்கு சென்றான்..... 


இதற்கு மேல் அவனே நினைத்தாலும் அந்த தெய்வீக முகத்தை அவனால் பார்க்க முடியாது என்று முன்பே தெரிந்திருந்தால் பார்த்திருப்பானோ என்னவோ?


நேரே தன் அறைக்கு சென்றவன், கதவை தாளிட்டுக் கொண்டு.... ஜன்னல் அருகில் இருந்த ஒரு மர பெஞ்ச்சை இழுத்து போட்டு.... பொத்தென அதில் அமர்ந்து தன் பார்வை ஓடையை நோக்கி வீசினான்....


சற்று தாமதமாகவே வீட்டினுள் நுழைந்த தேவயாசினி .... இன்று தன் மகன் தன்னை வழியனுப்ப வரமாட்டான் என்பது புரிந்து ஆபீஸ் கிளம்பும் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.....


இன்றுடன் தன் விதி முடிவடைவது அவளுக்கு தெரிந்திருந்த போதும், அதை காட்டிக்கொள்ள விருப்பம் இல்லாததால் தான் வேலைக்கு செல்ல தயாரானாள்.


❣️ சாகச பயணங்கள் சளைக்காமல் வரும் ❣️Rate this content
Log in