கல்கி வீரா - 2
கல்கி வீரா - 2


தன் தாய் தனக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த ஆடையை அணிந்து.... புதுக்கலையில் , ராஜ தோற்றத்தில், கண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக்கொண்டிருந்தான் ரக்ஷவன்.....
"அம்மா செலக்ஷன் எல்லாமே அழகுதான்..... எங்க இருந்து தான் இவ்வளவு அழகான ட்ரெஸ் எல்லாம் புடிக்குறாங்களோ....., ப்ப்பாஹ்...!! என்ன அழகு..... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..." , தனக்குத் தானே திருஷ்டி சுற்றிக் கொண்டான் அவன்.
வெளியே தேவயாசினியோ....., தன் மகனின் வரவுக்காக அவன் அறையின் கதவை நோக்கிக்கொண்டிருந்தாள்.....
தாயின் எதிர்பார்ப்பை நீண்ட நேரம் இருக்க விடாது .... மெல்ல கதவை திறந்த தன் மகனைப் பார்த்து தேவயாசினியின் கண்களில் கண்ணீர் கோர்த்தது......
அந்த நீல நிற பட்டு வஸ்திரத்தில் , தன் மகன் ராஜ தோரணையில்.... மெல்ல கதவைத்திறந்து , நெஞ்சை நிமிர்த்தி.., வீர நடை போட்டு வெளியே வருவதை கண்டவள் ஒரு நொடி மெய்சிலிர்த்துதான் போனாள்.....
தன் அழகு வதனத்தைக் கண்டு தன் தாய் ஸ்தம்பித்து நிற்பதை கண்ட ரக்ஷவன். ... "அம்மா..... அம்ம்ம்மா.....", எனத் தன் தாயின் முகத்திற்குமுன் கைகளை அசைத்தான்.
அவன் கை அசைவில் , தன் கற்பனைலோகத்தில் இருந்து வெளிவந்த தேவயாசினி, " கண்ணா.... இந்த டிரஸ்ல, சும்மா ராஜா மாதிரி இருக்க.... ரொம்ப அழகா இருக்கு டா.....", என தன் கண்ணில் இருந்த மையை எடுத்து அவன் காதின் பின் வைத்து விட்டாள் அவள்.
"ம்ம்ம்ம் ...... , ராஜா ரக்ஷவன், உலகப் பாதுகாப்பிற்காய் புறப்பட்டுவிட்டார்..." , என தன் இருக்கையை ,தன் இடையில் மடக்கி வைத்து , தலையை கர்வமாய் மேல் நோக்கி ..... தன் தாயை நோக்கி கம்பீரமான வீரப்பார்வைபார்த்து, இவ்வசனத்தை கூறினான் ரக்ஷவன்.
அதைக்கேட்டு தேவயாசினியோ ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்....
பின் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு, "கண்ணா ...! இதுவரை நீ இந்த மலையில பார்க்காத ஒரு இடத்துக்கு இன்னைக்கு நான் உன்ன அழைச்சிட்டு போறேன்..... அந்த இடம் உனக்கு ரொம்ப புடிக்கும்..... நான் இல்லாத நேரம் நீ அங்க போய் இருக்கலாம் ..... நா இல்லாத கொற உனக்கு இருக்காது...., உன் மனசுக்கு நிம்மதி கிடைக்கும் .... அந்த இடத்துல நான் எப்பவும் உன் கூடவே இருக்கிற உணர்வு உனக்கு கிடைக்கும்டா கண்ணா...", எனக் கூறும் போதே தன் கண்ணில் கசிந்த ஒரு துளி கண்ணீரை அவன் அறியாமல் தன் முந்தானையில் ஒத்தி எடுத்தாள் தேவயாசினி....
இந்த மலைல எனக்கு தெரியாத ஒரு இடமா ??..... வாய்ப்பே இல்லாம்மா....., நீங்க இல்லாதப்போ நான் மலையவே தான் சுத்திகிட்டு இருக்கேன் ..... அப்படி இருக்கறப்ப எனக்கு தெரியாம ஒரு இடமா??, அது எப்படி இருக்க முடியும்?", என அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் அவன் தன் தாயிடம் அடுக்கடுக்காக வினவினான்.
கண்டிப்பா இருக்குடா ராஜா... அங்க போறதுக்கு முன்னாடி, இந்த ஸ்வீட்ட சாப்பிடு", என்று தான் அவனுக்காய் செய்து வைத்த ஸ்பெஷல் பாயாசத்தை தன் கரத்தால் ஊட்டி விட்டாள்.
"ம்ம்ம்ம்ம்..... சோஓஓ ஸ்வீட்..... அம்மா கையால சாப்ட்டா ..... அது ஒரு தனி ருசி தான் ம்மா..... ", என்று கூறி பாயாசம் செய்த அந்த அற்புத கரத்திற்கு, தன் சார்பில் முத்தம் ஒன்றை பரிசாகக் கொடுத்தான் அவன்.
"இனிமே டெய்லி உன் கையாலே ஊட்டிவிடு அம்மா", என்று அவன் கூறிய மறு நொடியே அவள் இதழில் படர்ந்த மெல்லிய புன்னகை மறைந்தது...., எனினும் அதை காட்டிக் கொள்ள விரும்பாதவள் ....., கடினப்பட்டு மறைந்த புன்னகையை மீண்டும் இழுத்துப் பிடித்து தன் இதழில் பதித்தாள்.
"என்னம்மா ....??, நான் சொன்னத நீ நம்புறியா இல்லையா?, வேணும்னா நீயே சாப்பிட்டு பாரு... நெஜம்மாவே செம டேஸ்ட்", எனத் தன் கரத்தால் பாயாசத்தை எடுத்து தன் தாய்க்கு புகட்டினான் ரக்ஷவன். அதை ரசித்தவாறு உண்ட தேவயாசினி, "போதும்டா கண்ணா... நீ சாப்பிடு...", எனத் தன் ஆசைதீர தன் அன்பு புத்திரனுக்கு இனிப்பையும், அவனுக்காய் சமைக்கப்பட்ட காலை உணவையும் ஊட்டி விட்டாள் அவள்.
இருவரும் காலை உணவை உண்டு முடித்து விட்டு அந்த புதிய இடத்திற்கு செல்ல புறப்பட்டனர்.
"அம்மா..! , நிஜமாவே அந்த இடத்துக்கு நான் போய் இருக்க மாட்டேன்ன்னு நீ நினைக்கிறாயா?", எனத் தன் குறும்பு குரலில் சற்று குழப்பத்தையும் சேர்த்து ரக்ஷவன் கேட்க..., "ம்ஹும்ம்ம்...., கண்டிப்பா வாய்ப்பில்லை" , என அவனின் தலையில் லேசாகத் தட்டினாள் அவனின் அன்புத் தாய் தேவயாசினி.
"அப்படிங்கிற", என்று தன் பழுப்புநிற மாய கண்களை சுருக்கி, அவன் பார்வையை கூர்மையாக்கி பதிலுக்காக ஆவலுடன்.... , "ஹ்ம்ம்... நீயே பார்த்துக்கோ ... அந்த இடம் உனக்கு தெரியுமா தெரியாதான்னு...." என்று பதிலுக்கு தன் கண்களையும் சுருக்கி காட்டினாள் அவள்.
"ஓகே ..., அதையும் தான் பாத்துரலாம்..... லெட்ஸ் கோ...", என்று வீரநடை போட்டு வெளியேறினான் ரக்ஷவன். அவனைப் பின்தொடர்ந்து தேவயாசினியும் வெளியேறினாள்.
கதவை தாளிட்டு விட்டு, தன் வீட்டிலிருந்து சாலையை சென்றடையும் மரக் கட்டைகளால் ஆன ஒரு குறுகிய படிக்கட்டை இருவரும் சேர்ந்து கடக்க தொடங்கினர்.
அந்நேரம் தேவயானிசினியின் ஏக்க பார்வை , அவளின் ஒரே புத்திரனையே தீண்டி வந்தது ...... இன்னும் எவ்வளவு நேரம் தன் புத்திரணுடன் வாழ தனக்கு குடுத்து வைத்திருக்கிறதோ?..., அதன் பின் இவன் எப்படி வாழபோகிறான்?, நிச்சயம் என்னை நீங்கி என் புதல்வனால் வாழ முடியுமா??
என்று பல கேள்விகள் அவளின் மனதை துளைத்தது...... இருப்பினும் தன் வாழ்வின் கடமையை தான் செய்து தான் ஆகவேண்டும் ..... அந்த மலையின் மறைவிடதை இன்று இவனுக்கு காட்டி தான் ஆக வேண்டும்.... அவனின் வாழ்வின் ரகசியததைச் சென்றடைய இன்று இவன் என்னை பிரிந்து தான் ஆக வேண்டும்... என்று தன்னைத்தானே கல்லாக்கி கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறினாள் தேவயாசினி.
இந்த வெண்பனி சூழ்ந்த மலையில், தனக்கு தெரியாத ஒரு இடமும் இருக்கிறதா?? , என வியந்த வண்ணம் , தன் வாழ்வின் புதிய பயணத்தை தொடரபோகும் பாதையை நோக்கி, தன் வேக நடையை தொடர்ந்தான் ரக்ஷவன்.
❣️ சாகச பயணம் சளைக்காமல் வரும் ❣️