கல்கி வீரா.. 1
கல்கி வீரா.. 1


கண் பார்க்கும் தொலைவு வரை வெண்ணிறப் பணியை தன் போர்வையாய் போர்த்திய மலைகள்..... நாடெங்கும் கதிரவன் தன் கதிர்களை பரப்பிய அந்த அழகிய காலை பொழுதில்...., சூரியன் வந்தும் இன்னும் அதன் கதிர்கள் நிலத்தை தீண்டாத ஓரிடம் இருந்தது...,
அங்கு கதிரவன்.., மெல்ல மெல்லத் தன் கதிர் கீற்றின் இதமான வெப்பத்தை , பனிக்காற்றை உடைத்து புகுத்திக் கொண்டிருந்தது....
குளிருக்கு இதமாக கம்பளியால் நெய்த ஆடையை அணிந்து உலவும் அமைதியான தோரணையில் இருந்த மக்கள்....., கூட்டமாய் வாழவில்லை எனினும் ஒற்றுமையாய் வாழ பழகி இருந்த அழகிய ஓர் இடம் அது. இமயமலை அடிவாரத்தில் எவர் கண்ணிலும் எளிதில் சிக்காத அழகிய சிறு கிராமம்..... ஷாம்பலா......
அந்த மலையில் சற்று உயரமான இடத்தில் அமைந்த சிறிய அழகிய ஒரு வீடு..... அருகிலேயே அழகிய மீன்கள் துள்ளி விளையாடும் சிற்றோடை...... சற்று தொலைவில் நாளுக்கு இருமுறை மட்டுமே வரும் ஒரே ஒரு பேருந்துக்காக அமைந்துள்ள ஒரு பேருந்து நிறுத்தம்.... அந்த வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தால் , இந்த ரம்மிய காட்சிகள் அனைத்தும் மனதிற்கு இதம் சேர்க்கும், அழகு காட்சிகளாய் தோன்றும்.....
கதிரவனோ தன் கதிர்களை...., அந்த வீட்டின் ஜன்னலை மூடியிருந்த சிவப்பு கலந்த செந்தூர நிறத் திரையையும் தாண்டி நேராக அவன் கண்களில் படுமாறு வம்படியாக சென்றது.....
ஆனால் அவனோ...ஆழ்ந்த உறக்கத்தில்...., தினந்தோறும் தன்னை இம்சிக்கும் அந்த அழகிய அற்புதக் கனவில் முழுவதுமாய் தன்னை மூழ்கடித்து ...... கனவுலகின் பிடியில் ஆழ்ந்து இருந்தான்...,
தன்னை தீண்டும் கதிர்களை வெறுத்தவன்... தலையணையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டே மீண்டும் கனவில் பயணிக்க தொடங்கினான்....
அந்நேரம்....... தன்னுடைய நலத்தையே என்னாளும் விரும்பும் ஓர் உரிமைக் குரலின் அழகிய அழைப்பால் அவன் விருப்பத்தையும் மீறி, நிஜ உலகிற்கு வந்தான் ரக்ஷவன்.
"ரக்ஷவா ...... எழுந்திரு டா தம்பி...... எவ்வளவு நேரம் தூங்குவ?, என தான் உயிரினும் மேலாக நேசிக்கும் அந்த பிரியமான குரல் தன்னை அழைப்பதால்..., வேண்டாவெறுப்பாக எழுந்தான் நம் நாயகன்.
"அம்மா....., என் முன்னாடி வந்து நில்லு.... அப்பத்தான் நான் கண்ணைத் திறப்பேன்.... சீக்கிரம்", எனத் தன் பிரியமான முகத்தை தன் பதினாறாவது பிறந்தநாளன்றும் முதன்முதலில் காண விரும்பிய ரக்ஷவன் , அவளை அவசரப்படுத்தினான்.
"வந்து நின்னுட்டேன் டா ராஜா..... கண்ணத்தெறந்து பாருடா ....", என அன்பு வழியும் அந்த அற்புதக் குரலை , தன் பிறந்தநாள் அன்று முதன் முதலில் கேட்ட திருப்தியில் அவளின் அழகிய வதனத்தையும் காண..., தன் வசீகரிக்கும் அடர் பழுப்பு நிற மாய கண்களை மெல்லத் திறந்தான் ரக்ஷவன்.
தாயை கண்டு மெல்ல புன்முறுவலித்த அவன்.... பட்டென எழுந்து தன் அன்னையை கட்டிக்கொண்டான்.., "அம்மா..... எப்பவும் நீ என் கூடவே இருப்பேன்னு சொல்லு.....", என்று போல தான் கேட்க்கும் விஷயத்தை தன் பிறந்தநாள் விருப்பமாக கேட்டு வாங்கினான்.
அதற்கு அவள் அன்னையின் பதிலோ மெளனமே.....
"சொல்லும்மா.... நான் உன்கிட்ட வேற எதுவும் கேட்கப் போறதில்லனு உனக்கே தெரியும் ....., சீக்கிரம் சொல்லு.....", என ஒருவித ஏக்கத்துடன் அவளை வற்புறுத்தினான் பாசக்கார புத்திரன்.
"நான் எங்க போனாலும் உன் கூட தான் இருப்பே ராஜா...... அதுவும் உனக்கே தெரியும் .... அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற.....", அவளின் குரலில் ஒரு வித வருத்தம் கலந்திருந்தது. ஆனால் அவனோ அதை கவனிக்காது...., "டெய்லி வேலைக்கு போறேன்னு காலையில போறவ தான்..., நைட் தூங்குனதுக்கு அப்பறம் தான் வர..... ஒரே ஒரு நாள் தான் உன் கூட இருக்க முடியுது ..... அப்புறம் எப்படி நீ என் கூடவே எப்பவுமே இருகரதா சொல்லலாம்...." , என செல்லமாக தன் அன்னையிடம் கோபித்துக் கொண்டவன் செல்ல கோபத்தில் கைகளை கட்டிக் கொண்டு முகத்தை திருப்பி கொண்டான் .
அவனை பார்த்தவள், மெல்லிய மென்னகையுடன், "நமக்குன்னு வேற யாரும் இல்லப்பா..... அப்படி இருக்கும்போது நான் வேலைக்கு போய் தானே ஆகணும்..?, வேற வழி இல்ல ராஜா எல்லாம் நீ வளர்ந்து வேலைக்கு போற வரைக்கும்.... தான் அதுக்கு அப்புறம் நீ என்ன ராணி மாதிரி பாத்துக்கப்போர.... நான் வீட்டிலேயே இருக்க போறேன்..." , என அவனின் கன்னத்தை செல்லமாக வருடினாள்.
"கண்டிப்பா அம்மா ..... எல்லாம் நான் வேலைக்கு போற வர மட்டும்தான்..... அப்பறம் நாம நம்மளோட சொந்த ஊருக்கே போய்ரலாம்... அதுக்கப்புறம் நீயே வேலைக்கு போறேன்னு சொன்னாலும் நான் விடமாட்டேன்..... நம்ம ஊருல ஒரு பெரிய அரண்மனைய வாங்கலாம்.... அங்க நான் ராஜா, நீ தான் ராஜமாதா.... எப்படி என்னோட பிளான்?", என தன் தலையை சிலுப்பி விட்டுக்கொண்டான் அவன்.
"ரொம்ப சூப்பர்...., இப்போ சார் போய் குளிச்சுட்டு ரெடியா இருங்க ....., நான் ஆஃபீஸ் பொறதுகுள்ள எங்கேயாவது வெளியில போய்ட்டு வரலாம்", என்று கூறிவிட்டு அவனுக்காக வாங்கி வைத்த புதிய ஆடைகளை கையில் வைத்து திணித்து விட்டு வெளியேறினாள் தேவயாசினி.
அவள் அங்கிருந்து செல்லும்வரை அவளையே புன்முறுவல்பூத்து பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் சென்ற மறு நொடி கண்களை விரித்துக்கொண்டே தன் கனவிற்கு மீண்டும் திரும்பினான்.
அழகிய ஒரு குகை ..... நீல நிறத்தில் ஒளிரும் அழகு இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட, நீண்டுயர்ந்த பிரம்மாண்ட தூண்கள்..... ஒவ்வொரு ரத்தினமும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஜொலித்துக் கொண்டே அந்தக் குகைக்கு ஒளி சேர்த்துகொண்டே இருக்க.... அந்த ஒளியையும் மீறி தனது வசீகர தோற்றத்தில்.., ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்த நீல நிற பளிங்கு பொல் உள்ள வீரவாள், ரத்தின கற்களை மிஞ்சி தன் முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தது.....
இத்தகைய இடத்தில் நம் ரக்ஷவன், ராஜ மிடுக்கில் மெல்ல நடந்து வந்தான்... இமைக்குள் உருளும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ள அவனின் இரு வசீகரிக்கும் மாய விழிகள்..., சிம்மாசனத்தில் அழகாய் ஊர்ந்து கொண்டிருந்த அந்த வீர வாளை உற்று நோக்கி கொண்டிருக்க,.... அந்த வீர வாளை அவன் நெருங்கிய ஒவ்வொரு அடியிலும் அதன் பிரகாசம் ஏறிக்கொண்டே இருந்தது.
கண்களை பறிக்கும் அழகில்.... ராஜ தோரணையில் வீற்றிருந்தது அந்த வீரவாள்..... அதை நெருங்குபவர் எவராய் இருந்தாலும் அதன் ஒளியில் கண்களை இறுக்க மூடிக் கொள்வார்..., ஆனால் ரக்ஷவனோ..... தன் பழுப்பு நிற மாயக் கண்ணை சற்றும் இமைக்காது ..... அந்த வாளின் ஒளியை, வீரம் வழியும் தன் பார்வையில், அவன் வசப்படுத்தினான்...
அவனது வலிமை மிக்க, வீரக்கரத்தால் அதை தீண்ட போகும் அந்த நேரம்.........................
"தெனோம் விடிஞ்சிருது...... ஹ்ம்ம்.... நமக்கும் வீரத்துக்கு ரொம்ப தூரம்கிறது இந்தக் கனவுக்கே தெரிஞ்சிருக்கு போல...... அதான் அந்த வாள நம்ம கையில குடுக்கவே மாட்டேங்குது..... சரி.... கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டல.... நமக்குக் குடுத்து வைச்சது பார்க்க மட்டும்தான் போல.... சரி இப்போ போய் குளிப்போம்.... " என சலித்துக்கொண்டே எழுந்து குளியலறைக்குச் சென்றான் ரக்ஷவன். (எல்லா ஹீரோஸ் கிட்டயும் இருக்கிற எந்த விஷயம் நம்ம ஹீரோ கிட்ட இல்லனு இப்போ தெரிஞ்சிடுச்சா😋😆😉)
*******************
இவனை குளிக்க சொல்லி விட்டு வெளியே வந்த தேவயாசினி, அவன் பிறந்த அன்று நடந்த சம்பவங்களை நினைத்து மிகுந்த வேதனையில் பரிதவித்து போனாள்...
அன்று.....
அவனின் பிறந்த செய்தியைக் கேட்டு மகிழ வேண்டிய நாளில், அவன் தந்தையின் இறப்பு செய்தியை கேட்டு மொத்த குடும்பமும் வேதனையில் ஆழ்ந்திருந்தது..... சரியாக அதற்கு முந்தைய நாள் இரவு நடு ஜாமத்தில் குடுகுடுப்பைக்காரனின் ஒலி கேட்டு எழுந்து வாசலில் வந்து நின்றாள் தேவயாசினி......, "வீரனின் வருகைக்காக முதல் பலி உயிர் கொடுத்தவனே......, கருவில் இடம் கொடுத்தவலோ ஈரெட்டு ஆண்டில் இறைவனில் கலப்பாள்.....", என்று உரக்க கத்தி விட்டு , தன் கையிலிருந்த குடுகுடுப்பை பலமாக ஆட்டிவிட்டு.... அந்த இடத்தை விட்டு சென்றான்.... அதைக்கேட்ட அவள் பதட்டத்திலேயே அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்தாள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவாயாசினி, இரவு நடந்த சம்பவத்தில் மிகவும் பயந்து போய் இருந்தாள். பௌர்ணமி தினமான மறுநாள் மாலை, முழு நிலவு வெளியேறிய நேரம்.... அவள் பிரசவ வேதனையில் துடித்தாள்.
வைத்தியம் பார்க்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவளுக்கு அழகிய ஜோதியாய் நிலவின் ஒளியை ஒப்பிடும் அழகில் ஒரு ஆண்மகன் பிறந்தான். அவனை அன்புடன் கையில் ஏந்திய அவனின் தந்தை "குடும்பத்தைக் காக்க வந்த ரட்சகனே இவன்.... இனி இவனே என் ரக்ஷவன்.....", என்று கூறிய மறு நொடியே மாரடைப்பால் இறந்தார்....
இதை சற்றும் எதிர்பார்க்காத அவனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் "இவன் குடும்பத்திற்கு வந்த பேராபத்து......இவனை இதற்கு மேலும் உயிருடன் இருக்க விடக்கூடாது.... அப்படி விட்டால் அது நம் உயிருக்கு தான் ஆபத்து", என்று பிஞ்சு மழலை என்றும் பாராமல் கொள்ள துணிந்தனர்.
அவர்களிடம் இருந்து தன் குழந்தையைக் காக்க ..., அருகிலிருந்த ஒரு வெண்ணிறத் துணியை உருவிக்கொண்டு ...... தன் குழந்தையை அதில் சுற்றி தன் மார்போடு அணைத்தவள்...., தன் வேதனையையும் பொருட்படுத்தாமல், எவர் கையிலும் பிடிபடாமல் வேகமாக ஓடினாள்.
தன் கணவனை இழந்த பிறகு மாங்கல்யம் எதற்கு??..., தனக்கு உரிமையானவன் தன் கழுத்தில் போட்ட பொன்னால் ஆன மாங்கல்யத்தை கழட்டி, அதை அடகு வைத்து அதில் வந்த பணத்தை வைத்து, எவர் கண்ணுக்கும் சிக்காத தூரமான ஒரு இடத்திற்கு வந்து விட்டாள்.
இதுவரை இதைப் பற்றி அவள் தன் மகனிடம் கூட கூறியதில்லை. தற்போது அந்த குடுகுடுப்பைக்காரன் கூறிய ஈரெட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் , என்ன நடக்குமோ... இதன் பின் தன் மகனின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ... என்று பரிதவித்துக் கொண்டிருந்தாள் தேவயாசினி .
❣️ சாகச பயணம் சளைக்காமல் வரும் ❣️.......