காடுலகம்
காடுலகம்


காட்டில் எங்கு பார்த்தாலும் பஞ்சம்.
அதனால் யார் நிலங்களில் விவசாயம் செய்கிறார்களோ அவர்களுக்கு பால்சாதம். சிங்க ராஜாவால் வழங்கப்படும் என கரடி தண்டோரா போட்டது.
மரத்தின் மேலிருந்த பச்சைக்கிளி எனக்குக் கூட பால்சோறுன்னா ரொம்ப இஷ்டம். ஆனால் எனக்கு கொய்யாமரத்தில் உட்கார்ந்து கொய்யாப்பழம் சாப்பிடத்தான் பிடிக்கும்.
நரியோ,போடா! ஏதோ நகரத்துக்கு போனோமா இரண்டு கோழியைத் திருட்டுத்தனமா கொண்டுவந்தோ -மான்னு இல்லாமல் விவசாயமாவது! மண்ணாவது!
யாரது! ரொம்ப தெரிஞ்சமாதிரி பேசுறது..இப்பதான் மழை பெஞ்சுது. விதைக்க விதை மரம் தருது…செடி தருது..உழைக்கப்பயந்த மக்கள் மாதிரி பேசுறியா? அமைச்சர் யானை காடு அதிர பேசியது.
மக்கள் நலனைப் பார்க்காமல் சுயநலமாக வாழும் ராஜா ஒரு நாளும் ஜெயிக்கமாட்டான்.கடவுளின் பிரியத்திற்கும் ஆளாகமாட்டான். அரசருக்கு இந்தசேதி தெரிந்தால் உன்னைத் தண்ணீர் இல்லாத சென்னைக்கு அனுப்பி விடுவார்..பார்த்துக்கோ!
அங்கதான் இப்ப மழை பெஞ்சுச்சே,….ரோடெல்லாம் வெள்ளம் வந்துச்சுன்னு தொலைக்காட்சியில் போட்டாங்களே..என மயில் முகத்தில் கை வைத்தபடி கொண்டை அசையக் கேட்டது.
அப்படியா! இரு குரங்கு சேனாதிபதியிடம் கேட்போம்! அவர்தான் எல்லா இடமும் உளவு பார்த்து வந்துள்ளார்.
டேய்! நரி..அறிவு கெட்டத்தனமா பேசாதே! மழை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப பெய்யவில்லை. நெகிழி போடாதீர்கள் என சட்டம் மக்களால் இயற்றப்பட்டாலும் பாதி மக்கள் நமக்கென்ன என இருக்கிறார்கள்.தனது குடும்பத்திற்கான காய்கறிகளைக்கூட அவர்களுக்குப் பயிரிடத் தெரியவில்லை.
ஆமாம்! வெங்காயம் கிலோ 100 ரூபாயாமே! நான் காட்டில் வெங்காயமும்,பூண்டும்தான் பயிரிட்டுள்ளேன் என்றது முயல். ஏதோ! சிங்கராஜா நேர்மையா இலஞ்சம் வாங்காமல் இருக்கிறதுனால நம்ம சக்திக்கு வீட்டுக்கொரு தொலைக்காட்சி வாங்கித்தந்தார். இல்லைன்னா இவ்வளவு விபரம் தெரியுமா என நீட்டி முழக்கியது.
கிணறில் குளிச்சா எவ்வளவு ஜாலியா
இருக்கு தெரியுமா!! என தலையைத் துவட்டியபடி குரங்கு பேசியதைக் கேட்ட முயலுக்கு பொறாமையாக இருந்தது.
கிராமப்புறங்களில் விவசாயம் தவிர அலுவலகங்களும்,தொழிற்சாலைகளும் குறைவு என்பதால் நகர்ப்புறங்களில் ஜன நெருக்கடி அதிகமாகிவிட்டது. காட்டிலும் பாதி இடம் உதவாத மரங்கள்தான் இருக்குது! அதிகாரிகள் வைத்த தண்ணீரைத்தான் சமயத்துல குடிக்கிறோம். இவர் எப்படி ஜம்முன்னு வர்றாரு! என அதிசயித்தது மயில்.
நான் சென்னையிலிருந்து இரண்டு மணிநேரம் பயணம் செய்து வர்றேன். அங்கே எனக்குன்னு ராஜா நாற்பது ஏக்கர் நிலம் தந்தார். அதுல முதலில் குளம்,கிணறு வெட்டினேன். வைக்கிற பயிருக்கு ஏற்ப தண்ணீர் இருக்கிறது. காய்,பழம்,அரிசி எல்லாம் ராஜாவுக்கு கொடுத்தேன். ராஜா சந்தோஷமா எனக்கு இதோ பால்சோறு தந்தார் என்றது குரங்கு.
எல்லா இனங்களுக்கும் முதலில் குடிக்க நீர்,உணவு அவசியம். அதிலிருந்தே நாம் பிற பொருளை வாங்கிக்கொள்ளலாம் இல்லையா நரி……..
நரி குரங்கு சொன்னதை ஆமோதித்து அது சாப்பிடும் பால்சாதத்தைப் பார்த்தபடி இருந்தது. அந்த பால் சாதத்தில் தேன் ஊற்றியிருக்கா?
ஆமா! எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கோங்க என நாரெல்லாம் தேய்த்த சிரட்டையில் வைத்துக் கொடுத்தது.
இந்த சிரட்டை புதுசா வாங்கினீங்களா! ……
இல்லை. இதைச் செஞ்சு நகர்ப்புறங்களில் கொடுத்தால் நமக்கு வேணுங்கறதை வாங்கிக்கலாம். பண்டமாற்ற முறைன்னு சொல்வாங்க..அப்ப பணவீக்கம் பாதிக்காது.இந்த வேப்பங்குச்சும் அம்படித்தான். நீங்க இணையதளங்களைப் பார்க்கலையா என்றபடி பால்சாதத்தைச் சாப்பிட ஆரம்பித்தது. பெரிய நிதியமைச்சரு! என நரி மொண! மொணவென்றபடி தமது பங்கிற்கான நிலத்தில் என்ன பயிரிட்டால் தமக்குத் தேவையான பொருளைப் பண்டமாற்று செய்யலாம் என யோசித்தபடி நகர்ந்தது.
இப்பதான் புரியுது! யானை ஏன் இவரை சேனாதிபதியா வைச்சிருககாருன்னு.என்றபடி கிளி பறந்து தென்னைமரக் கீற்றில் தொங்கியபடி அணிலுடன் கீச்! கீச்! அமிர்தவர்ஷிணி ராகத்திற்கு ஏற்ப பாடல் பாடத் தொடங்கியது.