எதிரும் புதிரும்
எதிரும் புதிரும்
ராஜாவும் ராணியும் எதிர் எதிர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
இருவரும் விட்டு கொடுக்காமல்
சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள்.இருவரது பெற்றோரும் நண்பர்கள்.குழந்தைகள் பெரிதாகும் போது சரி ஆகி விடும் என்று பேசி கொள்வார்கள்.
ஒரு நாள் மாலையில் ராணி தன்னுடைய அப்பாவுடன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்கள்.வீட்டிற்க்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம்,ராஜா அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருப்பான்.
ராணியும் நிறைய தடவை பார்த்து இருக்கிறாள். அவனுடய நண்பர்களை அவளுக்கு நல்லா
தெரியும்.
அப்பா கூட பேசி கொண்டே அந்த மைதானத்தை கடக்கும் போது.ஒரு பையனை சில பையன்கள் கூட்டமாக கூடி அவனை அடித்து கொண்டு இருந்தார்கள்.உடனே ராணி,அப்பா அந்த அடி வாங்கும் பையன் ராஜா போல தெரிகிறான்
பக்கத்தில் போய் பார்க்கலாம் என்று கூற,அந்த பையன்களை மிரட்டி கொண்டே அருகில் சென்றனர்.இவர்கள் வருவதை பார்த்த அந்த பையன்கள் ஓடி விட்டனர்.அருகில் சென்று பார்க்கும் போது அது ராஜா தான்.
ராணி உடனே அவனுடைய சட்டையை சரி செய்து அடி பலமாக பட்டு விட்டதா என்று கேட்டு கொண்டு,கையில் இருந்த வாட்டர் பாட்டிலை கொடுத்து நீர் அருந்த சொல்லி விட்டு,வா வீட்டிற்க்கு போவோம் என்று கையை பிடித்து அழைத்து வந்தாள்.பந்தை வேடிக்கை பார்த்த ராஜா எடுத்து கொண்டு தர மறுக்கிறான் என்பதற்கு தான் இவ்வளவு ரகளை.
இனி மேல் தனியாக போகாதே,
அடி வாங்கியதை வீட்டில் நான்
பக்குவமாக வந்து சொல்கிறேன் என்று அவன் கூட போய்,ராஜாவின் அம்மாவிடம் விளையாட்டிற்கு
அடித்து கொண்டார்கள் என்று கூறி சமாதானம் செய்து ராஜாவை திட்டு வாங்குவதில் இருந்து தப்பிக்க வைத்தாள்.
அன்று முதல் ராஜா ராணியிடம்
சண்டை பொடுவதை நிறுத்தி இருவரும் சேர்ந்து விளையாடி
வந்தனர்.
