சுத்தம்
சுத்தம்


அந்த பல்பொருள் அங்காடியில் இருந்து, அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பினர் ராகினியும் அவரது பத்து வயது மகள் மிதிலாவும். கடையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து மிதிலா கீழே தரையில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டே வந்தாள். சீக்கிரமாக வீட்டிற்கு போக வேண்டும் என்ள முனைப்பில், வேகவேகமாக நடந்த ராகினி, மிதிலாவை கவனிக்கவில்லை.
கார்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்ததும், மிதிலா ஒரு காரின் அருகில் நின்றாள். அதில் அமர்ந்திருந்தவரிடம், "சார் ! ஒரு நிமிஷம் ! " என்றாள். "ரோடு குப்பையா இருக்கு. இந்த கார்ப்பரேஷன் ஆட்கள் என்ன தான் வேலை செய்யுறாங்க ? " அப
்படின்னு நாளைக்கு நாம இப்போ போட்டுட்டு போற குப்பையை பார்த்து நாமே கேள்வி கேப்போம். இதையே, "பக்கத்துல இருக்கும் குப்பைத் தொட்டிக்கு, ரெண்டு எட்டு நடந்து, குப்பையை அதிலே போட்டுட்டா, யாரையும் கேள்வி கேட்க வேண்டியதுமில்லை. ரோடும் சுத்தமா இருக்கும்.
இப்போ நீங்க கீழே போட்ட குப்பையை நான் குப்பைத் தொட்டியில் போட்டுடறேன். இனிமேல், குப்பையை கீழே போடாமல் நீங்களும் குப்பைத் தொட்டியிலயே போடுங்க" என்று சொல்லிவிட்டு, குப்பைத் தொட்டியில் குப்பையை போட்டுவிட்டு, தன் தாயுடன் காரில் ஏறி சென்று விட்டாள்.
இனியும் அந்த மனிதர் பொது இடத்தில் குப்பையை போடுவாரா என்ன ?