சுதந்திரம்
சுதந்திரம்


பேப்பரைப் பொறுக்கியபடி வினோத் நெகிழிப் பையைத் தூக்கியபடி நடந்தான். வினோத்! என்ற குரல் கேட்டு நின்றான். ஆன்லைன் கிளாசுக்கு வரலையாடா! எங்க அப்பாவுக்கு வேலை இல்லை. எங்க வீட்டில் டிவி கிடையாது. இதென்னடா பை! எங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை. மருந்துவாங்கக்கூட என்னிடம் காசு இல்லை. குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் பொறுக்கி கடையில் போட்டால் பணம் தருவார்கள். இருடா! நான் பணம் தருகிறேன். நீ ஏண்டா இந்த தொழில் செய்கிறாய்? தொழிலில் எதுவும் கேவலம் இல்லை. நீ என் வீட்டிற்கு வா! இரண்டு பேரும் டிவி பார்த்து படிப்போம்! கையில் என்னடா! குப்பை போடற வீட்டில் எனக்கு கொடி தந்தாங்க! இந்தாடா! என வினோத் ரகுபதி கையில் தந்தான். இந்த வருடம் நீ சுதந்திரதினத்தில் என்ன உறுதி மொழி எடுக்கப்போகிறாய்? இலஞ்சம் வாங்காமல் நாட்டை எப்படி காப்பாற்றுவது என உறுதி எடுக்கப்போகிறேன்.