அம்முவும் டெடியும்
அம்முவும் டெடியும்


அம்முவுக்கும் ராஜ்-க்கும் திருமணமாகி நான்கு மாதங்கள் தான் ஆனது. ராஜ் வெளிநாட்டில் வேலை செய்கிறான், அங்கிருந்து வேலைக்கு அழைப்பு வந்தது.
அதை கேட்டதிலிருந்து அம்மு சரியாக சாப்பிடவில்லை." அம்மு மூன்று மாதங்கள் தான் இந்த பிராஜக்ட், வேகமாக போய்விடும் அப்புறம் வந்துவிடுவேன்" என்று கூறி சமாதானப் படுத்தினான்.
என்னதான் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும்,பிரிவின் வலி உணர்ந்தால் மட்டுமே தெரியும். அந்த வேலையை அவன் விரும்பி செய்கிறான் என்பது அவளுக்குத் தெரியும் . அதனால் தன் வலியை மறைத்துக்கொண்டு
"பத்திரமாக சென்று வா, உன்னையே நம்பி உனக்காக ஒரு ஜீவன் காத்துக் கொண்டிருக்கிறது"
என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
ஏர்போர்ட்டுக்கு சென்றால் பிரிவின் வலியால்
விழி ஈரம் கொண்டு காட்டிக்கொடுத்துவிடும் என்று, நான் வரவில்லை என்று கூறிவிட்டாள். அவனும் அதை உணர்ந்தவனாக நெற்றி முத்தமிட்டு " நா உன் கூடவே உனக்குள்ளதான் இருக்கேன் ஜஸ்ட் நயன்ட்டி டேய்ஸ் தான்" என்று கூறி பிரியா விடை பெற்றான்.
போகும்வரை கையசைத்தபடியே சரி விரைவில் வந்துவிடுவார், என்ற மன தைரியம் இருந்தது. கண்ணை விட்டு உருவம் மறைய மறைய , அழுகையை அடக்க முடியாமல் அறைக்குள் சென்று தலையனையிடம் ஆறுதல் தேடினாள். தம் குடும்பத்தார் தன்னை எண்ணி வருந்தகூடாதென
தன் வருத்தத்தை தலையனையிடமே சொல்வது அவளது வழக்கம்.
அவள் கவலைபட கூடாது என அவள் அம்மா வீட்டிற்கு சென்று அங்கு இருக்க சொன்னான் . அவள் வேலை செய்யும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறாள். அவள் விடுமுறை நாட்களில் அம்மா வீட்டில் இருந்துவிட்டு , அன்று காலை நேராக பள்ளிக்கு சென்று விட்டாள்.
அங்கும் அவனது நினைவுகள் தைத்தன. அவ
னும் மணிக்கு ஒருமுறை போன் செய்து "என்ன பன்றா என் அம்மு என் தங்கம்" என்று அவளை கவலையடையாமல் பார்த்துக் கொண்டான்.
பள்ளி முடியும் நேரம் அவளுக்கு போன் பன்னி, எங்க மா இருக்க வீட்டுக்கு போய்டியா? என்று கேட்டான். அதற்கு அவள் , நா என்ன உங்கள மாதிரி பாரின்லயா இருக்கேன் பறந்து போக? என்று கிண்டலாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்து கதவை திறந்துவிட்டு , தண்ணீர் குடித்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள், அங்கு ஏதோ சிவப்பாக தலையனை போல ஒரு பையில் இருந்தது.
அவள் ஆர்வத்தில் வேகமாக சென்று என்னவென்று பார்த்தாள், அது அழகான பெரிய சிவப்பு நிற கரடி பொம்மை, எவ்வளவு பெரியதென்றால் ச்சேரில் உட்கார வைத்தால் ஒரு ஆள் உட்காந்திருப்பதைப்போல் தோன்றும்.
அதில் ஒரு கடிதம் இருந்தது அதில்," நான் சொன்னேன்ல அம்மு, உன் கூடவே தான் இருக்கேன்னு ,நான் வர வரைக்கும் அந்த டெடி தான் நான், உனக்கு கோவம் வந்தா அவன அடிச்சுக்கோ, ஆசை வந்தால் எனக்கு போன் பன்னி என்ன கொஞ்சிக்கோ ஐ லவ் யூ அம்மு ,மிஸ் யு என எழுதியிருந்தது.
அவன் அருகில் இல்லாத போது அவன் கொடுத்த பரிசு விலைமதிப்பற்றது. அவள் கண்களில் கண்ணீர் ஆனந்தக் கூத்தாடியது, மனதில் இருந்த வலியெல்லாம் ஒரு நொடியில் பறந்தோடியது.
அந்த மகிழ்சியில் போனை கையில் எடுத்தால் என்ன நேரமோ, அது பேட்டரி இன்றி ஆஃப் ஆகி இருந்தது. போனை சார்ஜ்ஜரில் போட்டுவிட்டு அவனுக்கு போன் செய்து அன்பு மழை பொழிய, அதில் அவன் நனைந்தான்.
அவன் திரும்பி வரும் வரை அந்த Bear தான் அவள் Dear...
( அவள் அடித்த அடியில் அந்த டெடி இப்போ பீரோ மீது ஓடி உட்கார்ந்துக் கொண்டது.)